உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம்

12

வலன் ஏந்துதல் செம்மாந்து ஏந்துதல்; வலக்கையில் ஏந்துதல் எனின் ‘கண்ணால் கண்டான்' என்பதுபோல் பயனற நின்றதாய் அமைந்து சிறவாமை அறிக.

வேந்தன் ய யானையைத் தந்தும், களங்கொண்டால் அல்லது களிறு கொள்ளேன் எனத் தன் பரியிலை போந்தனன் ஆகலின், “கொள்ளெனிற் கொள்ளுங்காலும் மாவேண்டலனே” என்றார். செஞ்சோற்றுக் கடன் கழிக்க விரும்புவார் வேந்தன் தரும் கலங்கலையும் கருதாது களம் புகுவர் என்பதை மேலுங் குறிப்பார், (34)

இளையோன் வெகுளி அழல்போல் அழிப்பது ஆகலின் அழற்றிகழ் வெகுளி என்றார். “எரிமுன்னர் வைத்தூறு” என்றும், “சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்றும் வள்ளுவனார் கூறுவன அறிக. “இகழ்தல் ஓம்புமின்” என முன்னுங் குறித்தார் (29, 30). எதிரிட்டு நின்ற மன்னர் பலர் ஆகலின் ‘மன்னிர்' எனப் பன்மையால் விளித்தார். ‘புகழ்சால்' என்றது பலர்கூடி ஒருவனை எதிர்க்கும் புகழ் அன்மையை வெளிப்படுத்தி நின்றது. இறந்து பட்டோர். இவன் ஒருவன் கை வேலால் பலரும் வீழ்ந்தனர் என்பாராய் ‘இவன் கைவேல்' என்றார். கணவன் இறக்கக் கழிகல மகடூஉவாய்க் கைம்மை கொள்வார் தலைமழித்தல் உண்டாகலின், “கைம்மையின் அறுத்த கூந்தல்” என்றார். கைம்மை கொள்வார் கூந்தல் களைதலை,

66

வீழ்ந்தோர்

-

கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி”

என்றும்,

“வென்வேல் விடலை இன்மையிற் புலம்பிக்

கொய்மழி தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல மகடூஉ’

என்றும்,

66

ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர

அவிர் அறல் கடுக்கும் அம்மென்

குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே

என்றும் வரும் புறப்பாடல்களால் (250, 261, 25) கண்டுகொள்க. நொய்தாய கூந்தல் எனினும் மகளிர் பலராகலின் பிறக்கம் (பெரும்பாரம்) ஆயிற்று. அதனை ஏற்றிய சகடம் தாங்காமல் முரிந்தன என்றார்,