உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்

என்பது கண்கூடு ஆகலின்.

-

151

பூழை யாவது வாயில். புழை என்பது நீண்டு நின்று அப்பொருள் தந்தது. பூழை - கோட்டை வாயிற்கதவில் இட்டுப் புகும் வழி. குரைப்பு ஒலிப்பு."ஏயும் ஒலிப்பு. “ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை” என்றார் தொல்காப்பியனார். ‘மன்னிர், மேலோன் மாவேண்டான்; இளையோன் வெகுளி இகழ்தல் ஓம்புமின்; இவன் வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கூந்தற் பிறக்கம் பொறுத்தல் ஆற்றாது சகடம் பல முரிந்தன, பூழை நின்மின்; ஆற்றலோன் நிலை அஞ்சுதகவுடைத்து” என இயைக்க.

15. தானை மறம் – 7

நேரிசை ஆசிரியப்பா

34. உண்டது, கள்ளுமன்று களிப்பட் டனனே; ஊர்ந்தது, புள்ளுமன்று பறந்தியங் கும்மே; மேலோர், தெய்வமல்லன் மகனே; நொய்தாங்குத் தெரியலர் எடுத்த பாசிலைக் கண்ணி

வெருவத் தக்க வேலி னோனே;

வேலே, பைய நிமிர்ந்து பருந்தின் ஓடிக்

கழிந்தார்த் தன்றவன் எறிந்ததை; கழல்தொட்டு

ஏந்துவரை இவரும் புலிபோல்

வேந்தவந் தூரும் வெஞ்சினக் களிறே.

(33)

புறத். 1376

(இ-ள்) இவ்வீரன் உண்டது கள்ளும், அன்று; ஆயினும் கள்ளுண்டான் போலக் களிப்புற்றுள்ளான். இவன் ஏறி ஊர்ந்து வந்தது பறக்க வல்லதோர் பறவையும் அன்று; ஆயினும் இவன் ஏறிய குதிரை பறவையெனத் தாவி உலாக் கொள்கின்றது; அன்றி இவன் மேதகைய ஒப்பற்ற தெய்வ மகனும் அல்லன்; ஒரு மறக்குடி மங்கை பெற்ற மைந்தனேயாம்; மிக எண்மையாகப் பகைவர் எடுத்தணிந்த பச்சிலைக் கண்ணியாம் சூடும்பூ வாடத் தக்க வேலையுடையான்; இவன் வேலோ, மெள்ள நிமிர்ந்து பருந்துபோலக் கூர்ந்து விரைந்தோடிக் கழலணிந்து உயர்ந்த மலைமேல் ஏறிவரும் புலியென, வேந்தன் ஏறிவந்த கடுஞ்சினக் களிற்றின்மேல் தைத்து ஊடுருவி வீழ்த்தி, பூசல் (ஆரவாரம்) கொண்டது என்றவாறு.