உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம் – 12

இ-து:- இவன் மகனே காண்; தெய்வமல்லன்; இவன் வேல் பருந்தெனச் சென்று வேந்தன் ஊரும் யானையை ஊடுருவி வீழ்த்தி ஆரவாரம் கொண்டது என்பது சொல்லியது.

து

(வி- ரை) வேந்தன் ஏறிவந்த யானையை வேலால் வீழ்த்திய வீரன் ஒருவன் மாண்பைக் கண்டோர் கூறியது இது.

கள் குடித்தலும் பருகுதலும் மரபாக, ‘உண்டது' என்றது மரபு வழு அன்றோ எனின், உணவு ஒழித்துக் கள்ளையே வேணவாத் தீரப் பருகுவார் உளராகலின் ‘உண்டது' என்றார், உணவாகவே அமையும் அளவு கருதி. இவ்வாறே வள்ளுவனாரும், “உண்டார்கண் அல்லது அடுநறா என்றும், "உண்ணற்க கள்ளை என்றும் கூறியது காண்க. இனி, னி, நறவுடன் நஞ்சும் இயைத்து,

கள்

66

எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

என்று இயம்பியதும் கருதுக. இனிப் பின்னூல்களில் “உண்டாட்டுப் படலம்" என்று வகுத்துக்கொண்டு பாடியது கள்ளுண்டு களித்தாடுதலையே எனவுங் கொள்க.

கள் பருகாமலே களிப் புண்டாமோ எனின், “காமம் கண்டார் மகிழ்செய்தல்” (திருக். 1090) உண்மையான் அதனைப் போல் களம் வீரனுக்கு மகிழ் செய்ததென்க.

குதிரை புள்ளெனப் பறந்து சேறலைக், “கட்டியன்ன காரி" என்றதால் (31) அறிக.

எதிரிட்டோர் அனைவரும் தோற்றத்தாலும், தொழில் மாண்பாலும் தம்மை மறந்து விழித்து நின்றார் ஆகலின் இவன் தெய்வம் அல்லன்; மகனே எனத் தெளிவுபடுத்தினார். தெய்வம் என்றது, “சூர்மருங் கருத்த சுடர் வேலனை என்க. இளமை யாலும், எழிலாலும், வேல் தாங்கலாலும் சவட்டலாலும் முருகு ஒப்பான் என அமைக.

தெரியலர் ஆவார் பகைவர். அவர் எதிரிடுவார் திறம் தெரிந்து போர்க்களம் குறுகார் ஆகலின் இவ்வாறே கருதலர், ஒன்னலர், மருவலர், பொருதலர் என்பனவும் கொள்க.

தெரியலர் கண்ணி வெருவுதல், அவர் வெருவுதலைக் குறித்தது. அச்ச மீக்கூர்ந்து வெதும்புதலால் கண்ணி வாடியதைக் கருதியதுமாம்.

வேல் மிக நிமிர்ந்ததாயின் மேலே ஏறிச் செல்லும் ஆகலானும், நிமிராது நேரே செல்லினும், தாழச் செல்லினும்