உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

153

தான் ஏறியுள்ள பரியினும் உயரிய யானையைத் தாக்குதல் சிறக்காதாகலானும் ‘பைய நிமிர்ந்து' என்றார், குறிவைக்கும் கூர்த்த திறத்தை வெளிப்படுத்துதற்கு. அவ்வேல் வைத்த குறிவாங்காது சென்று தாக்குதலைக் குறிப்பான் ‘பருந்தின் ஓடி என்றார். பெடையும், சேவலும் பிறரும் காப்பினும் குறிதவறாது குஞ்சைத் தூக்கிச் செல்லும் பருந்தின் குறிவைப்பைக் கருதுக.

கழிதல் - ஊடுருவிச் சேறல். ஆர்த்தல் - பூசலிடல். வேந்தன் வந்தூரும் வெஞ்சினக் களிறு வீழ்ந்துபட்டது ஆகலின் களம் கல்லெனப் பூசலிட்டது. வென்றார்க்குக் களிப்பும் தோற்றார்க்கு அவலமும் ஒருங்கு தோன்றுமாகலின்.

வரைமேல்

இவரும் புலியெனக் கரிமேல் இவரும்

வேந்தனைக் குறித்தார்.

“எறித்தோடை இலங்குநடைக் களிற்றின் மேற்கொண்டு இரைவேட்ட பெரும்புலிபோல் இகன்மேற் செல்ல”

என்னும் சயங்கொண்டார் வாக்கு இவண் கருதத் தக்கது. (கலிங்.

366).

15. தானை மறம் 8 நேரிசை ஆசிரியப்பா

(34)

35.

நிலையமை நெடுந்திணை ஏறி *நல்லோள் இலைபொலி புதுப்பூண் கணவனொ டூடிச் சிந்தி யன்ன சேடுபடு வனப்பிற்

புள்ளிக் காரி மேலோன், தெள்ளிதின் உள்ளினும் பனிக்கும் ஒருவே லோனே; குண்டுநீர்க் கிடங்கிற் கெண்டை பார்க்கும் மணிநிறச் சிறுசிரல் போலநம்

அணிநல் யானைக் கூறளக் கும்மே.

(இ-ள்) நிலையுதல் அமைந்த பழங்குடிக்கண் சிறந்து, நல்லியல் அன்பின் மனையாள் தன் கணவனோடு ஊடல் மிகக் கொண்டு இலைத் தொழிலால் பொலிவுறச் செய்யப் பெற்ற புதிய அணிகலங்களைச் சிதறி எறிந்தாற் போன்ற செறிந்தமைந்த வனப்புடைய புள்ளிகளைக் கொண்ட காரிக் குதிரையின் மேலே (பா.ம்) நல்லோரின்.