உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

155

என நயமுறப் பாடிய சங்கச் சான்றோர், 'ஊட்டியார்' எனப் பெயர் பெற்றமை இவண் உன்னத்தக்கதாம் (அகம். 68) மேலும் காரியைக், "கட்டியன்ன காரி' என்றார் (31)

ஒவ்வொரு புள்ளியும் தனித்தனி வனப்பினதாய் அமைந்த எழில் நோக்கிச் 'சேடுபடு வனப்பு' என்றார். சேடுபடுதல், செறிவுடையதாதல். இஃது இப்பொருட்டதாதலை, “ஆடுபரந் தன்ன ஈனல் எண்கின் சேடு" என்னும் அகப் பாட்டால் அறிக (331). இனிச் சேடு என்னுமிடத்துத் 'தோடு' என்னும் பாட முண்மையும் கருதின் அஃதிப் பொருட்டாதலும் விளக்கமாம். தோடு தொகுதி. இலை என்பது இலைத்தொழில். அஃதாவது செய்த அணிகலத்தை ஒளிப்படச் செய்தல். லைகொள் பூண்” என்றார் சிந்தாமணியிலும் (1371).

-

66

நினைக்கவே நடுக்கும் வேல் எனலால் நேர்ப்படின் ஆம் விளைவு பெரிதென்க. இற்செறிக்கப்பட்ட தலைவியைத் தோழி தலைவனிடத்து, “உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் என்று கூறுவது (நற். 253) இஃதொரு வாய்பாடாதல் விளக்கும்.

6

குண்டு நீர்க்கிடங்கு- ஆழ்ந்த நீர்நிலை. அதன்கண் உள்ள கெண்டையைக் குத்தி எடுத்தற்குச் சிச்சிலி (சிரல்) கூரிதிற் பார்க்குமாப்போல யானைக்கூறு பார்ப்பன். சிறுசிரல் எனினும் கெண்டையைப் பற்றுதல் வாயானாற்போல, யானைக்கூறும் இவ் வீரன் வாய்ப்பட்டழிதல் உறுதி என்றார். யானைக்கூறு அளவிடலால் ஒருங்கு அழித்தல் குறித்தார்.

சிரலின் இளநலங் குறித்துச் ‘சிறுசிரல்’ என்றார், முதுசிரல் பறக்கு மாற்றலும், பற்றிக்கொள்ளும் ஆற்றலும் முதுமையால் முறைமுறையே குறைந்து போயொழிதலின். அதனை,

“எரியகைந் தன்ன தாமரைப் பழனத்துப் பொரியகைந் தன்ன பொங்குபல சிறுமீன் வெறிகொள் பாசடை யுணீஇயர் பைப்பயப்

பறைதபு முதுசிரல் அசைபுவந் திருக்கும்”

என்பதனால் (அகம். 106) அறிக. இதனுள் தாமரைப் பழனத்துப் பொரிச்சிறு மீனைப் பற்றுதற்குப் பைப்பய அசைதலையும் பறைதபு நிலை உற்றதையும் முதுசிரலுக்குரைத்தமை தெளிக.

இனி,

"இறாஅல் அருந்திய சிறுசிரல்”

என்றும் (அகம். 286)