உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம்

12

66

'நிலையிரும் குட்டம் நோக்கி நெடிதிருந்து

புலவுக்கயல் எடுத்த பொன்வாய் மணிச்சிரல்'

- (சிறுபாண். 180-81)

என்றும் வருவனவற்றால் ஆழ்ந்த நீரில் பரியமீன் தேர்ந்து சிறுசிரல் கொள்வது கொள்க. மணிச்சிரல் - சிறுசிரல். மணி, சிறுமைப்பொருட்டாதலை மணிக்கயிறு, மணிக்குடல், மணித் தக்காளி என்பனவற்றால் காண்க.

66

சிரல் நீருள்மூழ்கி மீனைக் குத்தி எடுத்து உண்டலை,

‘மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச்

சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி"

பதிற். 42

என உவமைப் படுத்தியுள்ள நயம் உன்னுதோறின்பம் பயப்ப தாம், சிரல் என ஒரு மதிற்பொறி இருந்ததும், அது மாற்றார் மேற்சென்று கண்ணைக் குத்தும் சிச்சிலிப் பொறி என்பதும் சிலப்பதிகாரத்தால் அறியப் பெறும் செய்தியாம் (15: 214). வேலோன் யானைக் கூறு அளந்ததே, கூறுபடுத்தும் ஆற்றல் வெளிப்பாட்டை விளக்கும் என்பாராய்க் ‘கூறளக்கும்மே' என அமைந்தார்.

அளக்குமே என்பது சீர்நிலை கருதி 'அளக்கும்மே' என விரித்தல் விகற்பம் பெற்றது. இவ்வாறே 'நெல்விளையும்மே “பழமூழ்க்கும்மே” “கிழங்குவீழ்க் கும்மே” “தேன் சொரியும்மே” என்று கபிலரும் பாடினார் (புறம். 109). இந்நூலுடையாரும் மேலே (34) “பறந்தியங்கும்மே" என்றார்.

பகைப் படையின் களிற்றுத் தொகுதியை அளவிட்டுக் கண்டு ஆர்த்து வந்தானொரு வீரனைக் கண்ட பகைப்படை வீரருள் ஒருவன் தன் வீரரை நோக்கிக் கூறியது இது.

15. தானை மறம் 9

நேரிசை ஆசிரியப்பா

36. வருக ! வருக ! தாங்கன்மின்! தாங்கன்மின்!

உருவக் குதிரை ஒருவே லோனே;

இருகை மாக்களை யானஞ் சலனே;

நாற்கை மாக்களிந் நாட்டகத் தில்லை;

அவனும், தாரொடு துயல்வரும் தயங்குமணிக் கொடும்பூண்

மார்புடைக் கருந்தலை எற்குறித் தனனே;

(35)