உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும் யானும், கடிகமழ் உவகைக் கைவல் காட்சியென் துடியவற் கவனரை அறுவை ஈந்தனனே; அதனால், என்ன தாகினும் ஆக; முந்நீர் நீர்கொள் பெருங்குளம் தயங்க நாளை நோய்பொதி நெஞ்சம் குளிர்ப்ப அவன்தாய்

மூழ்குவள் ஒன்றோ; அன்றேல் என்யாய்

மூழ்குவள் ஒன்றோ; அன்றியவன்

தாயும் யாயும் உடன்மூழ் குபவே.

157

புறத். 1378

ம்

(இ-ள்) வருக ! வருக ! தடாதே ஒழியுங்கள்; தடாதே ஒழியுங்கள்; மின்னென விரையும் செலவமைந்த குதிரையை யுடைய ஒப்பற்ற வேற்படை வீரனே காண்; இரண்டு கைகளை யுடைய மாந்தர் எவரேயாயினும் அவர்க்கு அஞ்சுவேன் அல்லேன்; நான்கு கைகளையுடைய மாந்தர் எவரும் இம் மாநிலத்தில் தோன்றியது இல்லை. எதிரிட்டுவரும் அவனும் மாலையொடும் அசைந்து விளங்கும் மணி இழைத்த சிறந்த அணிகலங்கள் அணிந்த மார்பினையுடைய எனது பெரிய தலை ஒன்றனையுமே குறியாகக் கொண்டனன்; யானும் மிகப் பெருகிய மகிழ்வமைந்த கைத்தேர்ச்சி மிக்க அறிவுவாய்ந்த என் துடிகொட்டு வோற்கு அவன் இடையிற் கட்டிய உடையை வழங்கிவிட்டேன். ஆகலின் என்னைக் கொன்று மீள்தல் அவனுக்கும் மிக அரி தேயாம். அவ் வண்ணமே அவனைக் கொன்று மீள்வதும் எனக்கும் மிக அரிதேயாம். ஆதலால், வெற்றி எத்தகைய தாயினும் ஆகுக; கடல்நீர்ப் பெருக்கென விளங்கும் பெரிய குடம் பொலிவுறுமாறு துயரங் கப்பிக்கொண்ட நெஞ்சம் குளிருமாறு நாளை அவன்தாய் மூழ்குவதொருநிலையும் ஆகலாம்; அல்லா மல் என் தாயே மூழ்குவதொரு நிலையும் ஆகலாம்; அல்லாமல் அவன் தாயும் என்தாயும் ஒருங்கே மூழ்குவதொரு நிலையும் ஆகலாம் என்றவாறு.

இ-து:- "வேலோன் என்தலை குறித்தனன்; யான் அவனரை அறுவை ஈந்தனன்; என்னை வெல்லலும் அவற்கு அரிது; அவனை வெல்லலும் எனக்கு அரிது; இருவரும் களத்து ஒருங்கே வீழ்ந்து படலும் கூடும்” என்பது சொல்லியது.

(வி-ரை)

வருக வருக 'தாங்கன்மின் தாங்கன்மின்' என்பவை இரண்டும் ஆர்வமும் விரைவும் அமைந்த அடுக்குகள். “வருகதில் வல்லே வருகதில் வல்லே'

66