உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம்

12

எனத் தொடங்குவதொரு புறப்பாட்டு (284) உருத்தோற்றத்தை மட்டும் வாளா குறிக்காமல் அஞ்சுதகவந்த ஆற்றலையும் விரைவையும் செருக்கையும் கருதி நின்றதாம். “உரு உட்காகும்” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். “உருவக்குதிரை மழவர்’ என்றார் அகத்தினும் (1).

மாக்கள் மக்கள். இரந்து செல்வாரை இரவன் மாக்கள்' என்பது பெருவரவிற்றாய சங்கச் சான்றோர் வழக் காகும். இவண் சான்றோராம் வீரரைக் குறித்து நின்றது. இரண்டு கையுடையார்க்கு அஞ்சேன் என்றவன், இரண்டு கைக்கு மேம்பட்டுக் கொண்டிருந்தாரை மாந்தருள் கண்டறியேன் என்றான்; ஆகலின் ‘எவருக்கும் அஞ்சுவேன் அல்லேன்' என்பது குறிப்பாம்.

எதிரிட்டு வருவோன் நோக்கு என் தலைமேலதே அன்றி இப் பறந்தலை மேலதன்று என்பானாய், “கருந்தலை எற்குறித்தனனே" என்றான். என் குறிப்பும் அவனை எறிதல் அன்றி வேறொன்று அன்று என்பானாய், ‘அவனரை அறுவை என் துடியவற்கு ஈந்தனன்' என்றான். உடுத்த அறுவையை டுத்து உதவுதல் உயிரொழிந்தக் காலையன்றே கூடும். ஆகலின் அவனை எறிந்து படுத்தலைக் குறித்தான். தன் உறுதிப்பாடு விளங்க ‘ஈந்தனன்' என இறந்த காலத்தால் குறித்தான். போரிடத் தொடங்கு முன்னரே போரில் வெற்றி கொண்டதாகக் கூறு தலைக் “கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்" என்பது எனக் காட்டி, "இராமன் இலங்கைபுகு முன்னரே வீடணற்கு முடி வழங்கியமையைக்” குறிப்பார் நச்சினார்க்கினியர் (தொல். புறத். 12)

வாழையடி வாழையாய்த் தாய் மகள் முறைவழியே தோழியர் வருமாப்போலத் தந்தை மகன் முறைவழியே துடி கொட்டுவோர் வருவர் ஆகலின் அக் கெழுதகை முழுதுறத் தழுவித் துடியற்கு ஈந்தான், இதனை,

"முந்தை முதல்வர் துடியர் இவன்முதல்வர் எந்தைக்குத் தந்தை இவனெனக்கு- வந்த குடியொடு கோடா மரபினோற் கின்னும் வடியுறு தீந்தேறல் வாக்கு

என்பதனால் தெள்ளிதிற் கொள்க. (புறப். வெண். 19)

தன்னாண்மை ஒன்றனையே கருதுவான் அல்லாமல் எதிரிடுவான் ஏற்றத்தையும் உணர்ந்து போற்றுவான் இப் புகழ் வீரன் ஆகலின்,