உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தகடூர் யாத்திரை மூலமும் உரையும் ‘என்னெறிந்து பெயர்தல் அவற்குமாங் கரிதே

அவனெறிந்து பெயர்தல் எனக்குமாங் கரிதே”

159

என்றான். இருவருள் எவர் வெற்றியும் தெளிவுபடக் கிடந்தது அன்றாம் ஆகலின், “என்னது ஆகினும் ஆக” என்றான். இரு வருள் எவர் வெற்றி கொள்ளினும் இருவர்க்கும் வெற்றியே என்பானாய் இவ்வாறு கருதினான், ஒருவரை ஒருவர் விஞ்சிய உரவோர் ஆகலின்.

பருங்குளம் எனினும் அதன் நீர்ப்பெருக்கை விரிப் பானாய், 'முந்நீர் நீர்கொள் பெருங்குளம்' என்றான். நீர் பொங்கித் ததும்பி அலையோலிட வளம் பெருக்கி நிற்றலே குளத்திற்கு எழில் ஆகலின் அதனைக் குறித்தான். அக் குளத்திற்கு மேலும் பொலிவாதலை விளக்குவானாய், இருபொரு வேந்தரும், இரு திறவீரரும், மூதிற் பெண்டிரும், பேரிற்சிறாரும் ஒருங்கு சூழ்ந்து நின்று உவகைக் கலுழ்ச்சி அரும்பத் தாயர் நீராடுதலைக் குறித்தான்.

'மகனை இழந்தேன்' என்பதால் தாயர்க்கு 'நோய் பொதிதலும்' 'சான்றோனை ஈன்றேன்' என்பதால் ‘நெஞ்சம் குளிர்தலும்’ உண்டாம் என்க. இதனை,

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்

“ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே"

என்னும் சான்றோர் உரைகளுடன் இயைத்துக் கண்டுகொள்க.

அவன் தாய் குளத்தில் மூழ்குதல் கூடும்; அன்றி என்தாய் மூழ்குதலும் கூடும் என்றமையால், எம்முள் எவரும் வீழ்ந்துபட நேரும் என்பதை யுரைத்தான். இதுகாறும் தம்முள் ஒருவர் வீழ்ந்துபடுதலையே குறித்த அவன் - ஏன் - இருவருமே ஒருங்கு வீழ்ந்து படுதலும் கூடும் என முத்தாய்ப்பு வைத்து முடித்தான். இதனையே,

66

அவன்தாயும் யாயும் உடன்மூழ் குபவே

99

என்றான். ஆய் என்பது பொதுப்பெயராக அன்னையைக் குறிக்கும். 'தாய்' எனவரின் அவன் தாய் என்பதையும், ‘யாய்’ எனவரின் என் தாய் என்பதையும், 'ஞாய்' எனவரின் நின்தாய் என்பதையும் சுட்டும். இவண் 'தாய்' என்பது அவன் தாய் என்பதையும் 'யாய்' என்பது என் தாய் என்பதையும் குறித்தலைக்