உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் 12

கருதுக. அவ்வாறே, “யாயும் ஞாயும் யாரா கியரோ” எனவரும் குறுந்தொகைப் பாட்டில் ‘யாய்’ என்பது என்தாய் என்பதையும் ஞாய்' என்பது நின்தாய் என்பதையும் குறித்தலை ஓர்க. இவ்வாறாகத் தாய் எனப் பொதுப்பெயர்நிலை கொண்டமை சங்கச் சான்றோர் காலத்திற்குப் பின்வந்த பெரு வழக்காயிற்று. த் தகடூர் யாத்திரை சங்கச் சான்றோர் காலத்ததாகலின் அந்நெறி பிழையாமை அமைந்து நின்றது என்க.

இனித் தாய் என்பதே அன்றித் தந்தை, முன்னோன், பின்னோன் ஆயோரையும் இந்நெறி பிறழா வழக்கொடு வழங்கினர் என்பதைத் தெய்வச்சிலையார் தெய்வச்சிலையார் தெள்ளிதின்

விளக்கிப் போந்தார் (தொல். சொல். எச். 14)

"மூன்றிடத்தும் ஒட்டப்பட்ட பெயர்கள் ஆறாம் வேற்றுமை முறையைக் குறித்து மேற்சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும்; தாய், ஞாய், யாய் எனவும்; தம்முன், நும்முன், எம்முன் எனவும்; தம்பி, நும்பி, எம்பி எனவும் முதல்வனையும் ஈன்றாளையும் முன்பிறந்தானையும் L பின்பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்கள்” என அவர் தரும் விளக்கம் கண்டு மகிழ்க.

தமிழ் வீரர்தம் தகைமாண்ட போராண்மைக்கு எடுத்துக் காட்டாய் இலங்கும் இப் பாடலின் பொருண்மாண்பும் உணர்வு மாண்பும் உன்னுதோறும் உன்னுதோறும் கழி பேரின்பம் பயப்பதாம். இத்தகைய தகடூர் யாத்திரை நூலையும் ‘யாத்திரை’ விட்ட தமிழர்தம் பேதைமையும், பெருமடியும், தாய்மொழி பேணாக் கீழ்மையும் நினையுந்தோறும் நினையுந் தோறும் நெஞ்சம் புண்ணாக்குவதாம்! (36)

16. குதிரை மறம்

போர்க்கலையிற் சிறந்த குதிரையின் திறப்பாட்டைக் கூறுவது குதிரை மறம் எனப்பெறும்.

“எறிபடையான் இகலமருள்

செறிபடைமான் திறம்கிளந்தன்று”

என்பது புறப்பொருள் வெண்பாமாலை (133).