உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி முன்னுரை

தகடூர்

தகடூர் என்பது இந் நாளைச் சேலம் மாவட்டத்தில் உள்ள தருமபுரியின் பழம்பெயர் ஆகும். தகடூர் என்னும் பெயரைப் 'பதிற்றுப்பத்து வழங்குகின்றது. தகடூரின் தென் கிழக்கில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘அதமன் கோட்டை என்னும் ஊர் 'அதியமான் கோட்டை' என்பதன் சிதைவே ஆகும். அதியமான் கோட்டையின் சிதைபாடுகளை இன்றும் காணலாம். கோட்டையும் சிதைந்து, கொண்ட பெயரும் சிதைந்து போய நிலைமையிலும் தன் பழவரலாற்றை நினைவூட்டும் அதியமான் கோட்டை வாழ்வதாக !

தகடூர் தகடை, தகட்டூர், தகடாபுரி என்னும் பெயர் களாலும் வழங்கியது. தகடு என்னும் சொல் பலபொருள்களைத் தரும். அவற்றுள் தகட்டு வடிவப்பொருள், பொன், பூவின் புற இதழ் ஆகிய முப்பொருள்களிலும் சங்கத்தார் ஆண்டுள்ளனர். அவற்றுள்ளும்,

266

366

466

கருந்தகட் டுளைப்பூ மருது"

'தூத்தகட் டெதிர்மலர்”

4“வேங்கை மாத்தகட் டொள்வீ”

5"கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ” 6“கானப் பாதிரிக் கருந்தகட்டு”

எனப் பூவின் புறவிதழ் என்னும் பொருளே பயில வழக்குப் பெற்றுள்ளது. பொன்னின் வேறுபடுத்துதற்கு "நாறாத்தகடு” என்னும் பெயரை ஆள்கின்றது 'நாலடியார். இப் புறவிதழ் என்னும் பொருளில் ஊன்றிப் புலவர் பாண்டியனார் “அகவிதழைத் பாதுகாக்கும் புறவிதழ் போன்ற மதிலையுடைய ஊரென்னும்

1. பாடல். 78

2. முருகு.27

3.

நற். 52

4.

புறம். 202

5. ஐங்குறு. 219

6.

அகம். 261

7. பாடல் 266