உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம்

12

பொருள்பட அதியமான் தன்னூர்க்குத் தகடூர் எனப் பெயர் வைத்தான்” என்பார்.

இனித் தகடு என்பது உயரமின்றித் தகடாக அமைந்த மலையைக் குறிக்குமாகலின், அம் மலை சார்ந்த ஊர் தகடூர் எனப் பெயர் பெற்றது எனக் கொள்வது இயற்கை தழுவியதாம். இப்பொழுதும் மட்டப்பாறை, குட்டைப்பாறை, தட்டைப் பாறை, தகட்டுமலை, தணிகைமலை, மைப்பாறை, சிப்பிப்பாறை, மணற்பாறை, சாய்மலை, திண்டுக்கல், செங்குன்று, கொடுங் குன்று, அண்ணாமலை முதலாய இயற் காரணப்பெயர் தழுவிய மலைகளும் மலைசார்ந்த ஊர்களும் எண்ணற்றனவாய் இருத்தலைக் காண்பார், இப் பெயர் அமைதி அறிதல் கூடும்.

466

அதியமான்மலை ‘குதிரைமலை' ஆகும். 2“ஊராதேந்திய குதிரை என்றும் 3“ஊராக்குதிரை” என்றும், 4" நெடுநெறிக் குதிரை” என்றும், 5“ குதிரைக்கவான்” என்றும் குதிரைமலை சங்கச் சான்றோரால் பாடுபுகழ் பெற்றது. 666 6“குதிரை போன்ற தோற்றம் வழங்கியமையாலோ, குதிரை மிக்கிருந்தமையாலோ இப் பெயர் பெற்றதாகலாம். 7“உருவக்குதிரை மழவர்” எனச் சான்றோரால் பாடு புகழ் பெற்றவர் அதியர் ஆகலின், அவர் குதிரை மிக்குடையராய் இருந்தனர் என்பது வெளிப்படை. கொங்கர் ஆக்கள் மிகவுடைமையால், 8“ ஆ கெழு கொங்கர்” எனப் பெற்றமை இவண் கருதத்தக்கது.

தகடூர், முல்லைவளமும் மருதவளமும் ஒருங்கே அமைந்த வாழ்வுடையது; இவற்றைப் பதிற்றுப்பத்தும் புறநானூறும் காட்டுகின்றன.

“மெல்லியல்பு வாய்ந்த மகளிர் அசைந்த நடையில் மருத நிலம் செல்வர்; அங்குத் தாமரை குவளை ஆகிய மலர்களைக் கொய்வர். முல்லைநிலம் சென்று தினைக்கொல்லையில் கிளிகடிவர்; பல்வேறு பயன்களையும் ஒருங்கே பெறுவர் என்பது பதிற்றுப் பத்து.

கன்றோடு கூடிய பசுக்கூட்டம் காட்டிலே துயரின்றி வதிகின்றது; வழிநடைச் செல்வார் தாம் விரும்பும் இடத்தில் 1. எழினி.பக். 12 2. புறம். 158 3. புறம். 168 4. அகம். 372 5. அகம். 143 “குதிரை முகம்போலக் காட்சியளிக்கும் மலைமுடியைக் குதிரைமலை” என்றனர் என்றும், “பொதுமக்கள் குதிரை மூக்குமலை (Gudramuku)” என்றே வழங்குகின்றனர். கடலில் இருந்து காண்போர்க்குக் குதிரை முகம்போல் காட்சியளித்தலால் இப் பெயர் பெற்றது என்றும் கூறுவர். - சேரமன்னர் வரலாறு பக். 14, 15.

6.

1.

அகம். 1 8. பதிற். 22 9. பாட்டு. 78