உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

3

நிறைந்த

துயரின்றித் தங்கிச் செல்கின்றனர். களத்தில் நெற்பொலி காவலில்லாமல் கிடக்கின்றது; அசையாச் செங்கோல் திகழ்கின்றது” என்பது 'புறநானூறு.

நாட்டின் வளங்கூறும் பாட்டுகளைத் தகடூர் பலவாகக் கொண்டிருந்தும். குதிரைமலையின் வளம் கூறும் பாட்டொன்றும் கொண்டிலது. அம் மலையின் தன்மை அத்தகைத் தென்க.

266

அமிழ்து விளைதீங்கனி ஔவைக் கீந்தவன்” அதியமான் நெடுமான் அஞ்சி. அவனை, 3“என்னை” என்றே 'பன்னியுரைத்துப் பயின்று வாழ்ந்தவர் ஔவையார். அவரும் 5“பெருமலை என்றாரே அன்றிப் பிறிது வளம் கூறினார் அல்லர். அவர்,

66

“ஓங்குமலைச் சிலம்பிற் பிடவுடன் மலர்ந்த

வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன ஊன்பொதி யவிழாக் கோட்டுகிர்க் குருளை மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்தத் துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப் பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை

அறுகோட் டுழைமான் ஆண்குரல் ஓர்க்கும் நெறிபடு கவலை நிரம்பா நீளிடை

99

என்று ‘பாடியிருப்பதை நோக்கக் குறிஞ்சி நிலை பாட அவர் அறியார் என எவரும் கூறார். இதனால் தகடூர்நாடு சேரநாடு போன்ற குறிஞ்சி வளம் உடையதன்று என்பது விளங்கும்.

தகடூர், குலோத்துங்க சோழன் காலத்தில் சோழ மண்டலத்திற்கு உரியதாக இருந்தது. இதனை 7“ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு பன்னிரண்டாவது நிகரிலி சோழ மண்டலத்துக் கங்க நாட்டுத் தகடூர் நாட்டுத் தகடூர் நாட்டுத் தகடூர்” என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம்.

அதன் பின்னே பல்லவர் வலிமேம்பட்டனர். கோப் பெருஞ்சிங்கன் என்பான் பல்லவ வேந்தனாக விளங்கினான். அவன் அரசியல் தலைவருள் வீரசேகரக் காடவராயன் என்பான் ஒருவன். அவன் அதியமான் நாட்டின்மேல் படை கொண்டுசென்று

1. பாட்டு. 230

2. சிறுபாண். 101

3.

எம் தலைவன்

5. புறம்.91

6.

அகம். 147

7.

S.I.I. Vol. VII No. 534

4. புறம்.88,89,95,96,104