உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம்

12

தகடூரைப் பெயரும் இன்றி அழித்தான். “கண்டராதித்தன் வாசலுக்கு மேற்கே புறப்பட்டுக் கற்கடமாராயன் கூடலும் அதிகை மான் நாடும் அழித்து வெற்றிக்கொடி உயர்த்து அனுமனும் பொறித்தான் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயன் என விருத்தாசலக் கோயில் கல்வெட்டுக்

கூறுவதால் இச் செய்தி புலப்படும்.

காடவராயன் செய்த அழிபாட்டின் பின்னரே ‘தகடூர்’ அறவே அழிந்துபட்டது. 'தருமபுரி' (தருமாபுரி) என்னும் பெயரைத் தாங்கியது! அதியமான் வழியினர் வள்ளல்களாகத் திகழ்ந்தவர். தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக விளங்கியவர். அவர்தம் வழிவழிப் பெருமையை எண்ணிய மக்கள் நாடும் நகரும் இழந்து நலிந்துபோய காலையும், தம் பீடும் பெயரும் மறக்க முடியாதவராய் அறவோர்களாகிய அவர்கள் இருந்து ஆட்சி செய்த ஊரைத் 'தருமபுரி' என வைத்துக் கொண்டனர் என்பது சாலும். தருதல் வழியாகப் பிறந்த சொல் தருமம். 2“தருமமோ டியல்வோள்' என்பது காரிக்கண்ணனார் வாக்கு. 3“தருமமும் ஈதேயாம் தானமும் ஈதேயாம்' எனத் தொடங்குகிறது இத் தகடூர் யாத்திரைப் பாடலுள் ஒன்று. 4தரும புத்திரன் என்னும் வேந்தனைக் கோதமனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உண்டு.

தகடூர் அழிந்துபடினும் 5கொங்குநாட்டுத் தகடப் பாடியும், 'சேலம் நாட்டு அதிகப்பாடியும் செங்கற்பட்டு அதியமான் நல்லூரும், திருமுனைப்பாடி நாட்டுத் திருவதிகையும் சீரிய நினைவுச்சின்னங்களாக இலங்குகின்றன.

யாத்திரை

7

‘யாத்திரை' என்னும் சொல் ‘செலவு' என்னும் பொருளது ந் நாளில், திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்வதே யாத்திரை எனப் பெறும். பாரதத்துத் ‘தீர்த்த யாத்திரைச் சருக்கம்' என ஒரு சருக்கமுண்மையும், ‘தலயாத்திரை' என வழக்குண்மையும் இதனைத் தெளிவிக்கும். திருக்கோயில் செலவு, யாத்திரை எனப் பெறுவது தொன்மையான தென்றே அறியக் கிடக்கிறது. கூடல் மாநகரில் இருந்து திருப்பரங்குன்றத்திற்குச்

1. தகடூர் அதியமான்கள்

பேராசிரியர் ஔவை சு.து.

2.

புறம். 353

3.

தகடூர். 38

4.

புறம். 366

5.

எழினி பக். 13

6.

ஊரும்பேரும் பக். 90

7.

எழினி பக். 14-15