உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

LO

5

செவ்வேளை வழிபட வரும் திராளான மக்களை ‘யாத்திரை’ போவாராகக் குறிக்கின்றது' பரிபாடல்.

66

குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு நேர்பூ நிறைபெய் திருநிலம் பூட்டிய

தார்போலு மாலைத் தலைநிறையால் தண்மணல் ஆர்வேலை யாத்திரை செல் யாறு

என்பது அது. ஆனால், போர்மேற் செல்லுதலையும் யாத்திரைச் சொல் குறிக்கும் என்பது தகடூர் யாத்திரையால் அறியப் பெறுவதேயாம். இஃது ஆராயத்தக்கது.

ஆசிரியர் தொல்காப்பியனார், போர் மேற் செல்லுதலைச் 'செலவு' என்றே குறிப்பார். 2“புடை கெடப் போகிய செலவு” என்பது அவர் குறிப்பு. 3‘செலவு' எனத் துறை வகுத்ததை அல்லாமல், 4“அதரிடைச் செலவு' எனத் துறையும் விளக்கமும் காட்டினார் ஐயனாரிதனார். தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் 5“செலவழுங்குதலும்' உண்டு என்னும் தொன் னெறியும் செலவுப் பொருள் இன்னதெனக் காட்டும்.

6“செங்கோன் தரைச் செலவு” என்பதொரு நூல் இருந்ததாக அறியப் பெறுகிறது. இவ்வாறாகத் தகடூர்ச் செலவு என்பது பெயராய் அமையாமை மேலும் எண்ணத்தக்க தாகவே உள்ளது. இனிக் 'களப் போர்' குறித்த ஒரு நூல் 'களவழி' என்பதும் நோக்குதல் வேண்டும்.

தகடூர் யாத்திரைப் பாடல்களுள் பெரும்பாலானவற்றை நாம் இன்று அறிந்து கொள்ள உதவிய அருமை நூல் புறத் திரட்டாகும். அந் நூலில் தகடூர் யாத்திரை என்பது ‘தகடூர் மாலை' என்னும் பெயராலும் குறிக்கப் பெறுகிறது. இக் குறிப்பு மிக வலுவுடையதாகும்.

புறப்பொருள் பற்றிய ஒரு பழமையான நூல் ‘ஆசிரிய மாலை’ என்பதாம். அதில் 17 பாடல்களைப் புறத்திரட்டு வழங்குகின்றது. புறப்பொருள் இலக்கணம் பற்றிய இடைக்கால இலக்கண நூல் புறபொருள் வெண்பாமாலை என்பது எவரும் அறிந்தது. ஆதலால் தகடூரில் நிகழ்ந்த போர் பற்றிய நூல் ‘தகடூர்

1. பாடல் 19: 15-18 புறப்பொருள் வெ.மா. 24

4.

6.

3. புறப்பொருள் வெ. மா. 5

2.

தொல். புறத் 3.

5.

தொல். பொருள். கற். 44

மதுரைச் சுந்தரபாண்டியன் ஓதுவாரால் 1909இல் பதிப்பிக்கப் பெற்றது. ஏழு பாடல்களும் உரையும் கொண்டது.