உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம்

12

மாலை’ எனப் பெயர் கொண்டு இருந்தது என்பது ஏற்கத் தக்கதேயாம். இன்னும், வீரவெட்சிமாலை, உழிஞைமாலை, தானைமாலை, நொச்சிமாலை, தும்பைமாலை, காஞ்சிமாலை, வாகைமாலை, வென்றிமாலை முதலியனவாகப் புறப்பொருள் பற்றிய பிற்கால நூல்கள் சில எழுந்தமை இப் பெயரமைதிக்கு அரணாவதாம்.

ப்

தகடூர் யாத்திரையின் பழம்பெயர் தகடூர்மாலை எனின், அப்பெயர் எப்பொழுது மாற்றம் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் ஆராயத்தக்கதே. அதற்குப் பேராசிரியர் வரையும் அரிய குறிப்பு ஒன்று துணை செய்கின்றது.

1“தொன்மை தானே

உரையொடு புணர்ந்த பழமை மேற்றே”

ம்

என்னும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவுக்கு உரை கண்ட உரையாசிரியர் "உரையொடும் பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள்மேல் வருவனவாம். அவை இராம சரிதை, பாண்டவசரிதை, முதலாயினவற்றின் மேல் வரும் செய்யுள்” என்றார். “பொருள் பழமையானது; உரை வடிவில் அமைந்தது; செய்யுள் புதிது யாக்கப்பெற்றது” என்பது அவர் கருத்து. ஆனால் பேராசிரியர் இந் நூற்பாவிற்கு வேறொரு பொருள் காண்கிறார்.

"தொன்மை என்பது உரைவிராஅய் பழமையாகிய கதைப் பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு, அவை, பெருந் தேவனாராற் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன என்பது அவர் உரை. இவ் வுரையையே வழி மொழிந்த நச்சினார்க்கினியர். “சிலப்பதிகாரமும் அதன் பாற்படும்" என இயைத்துக் கொண்டார். உரையும் பாட்டும் விராவச் செய்யப் பெறுவது தொன்மை எனப்படும் என்பதும், அதற்குத் தகடூர் யாத்திரையும், பெருந்தேவனார் பாரதமும் சான்று என்பதும் பேராசிரியர் கருத்தாதல் தெளிவாகும். பழமையவாகிய கதைப் பொருள் என்றது செய்யுளையே யாம். அதற்கு விராவச் செய்யப் பெற்றது உரையையே யாம்.

பெருந்தேவனார் பாரதம் என்பது பாரத வெண்பா ஆகும். அதில், உத்தியோக வீடும துரோண பருவங்களில் 830 பாடல்கள் உரையிடையிட்டு வரக் கிடைத்துள்ளன. அதன் செய்யுட் பழமையும் உரைநடைப் புதுமையும் எளிதில் 1. தொல். செய். 237