உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

2

7

புலனாவதை அதன் 'ஆராய்ச்சி முன்னுரையில் காண்க. அன்றியும் அதன் முன்னைப் பதிப்பாசிரியர், “பாட்டுகளெல்லாம் பழைய பாட்டுகளே; வசன மட்டும் பிற்காலத்துப் புலவரொருவர் எழுதிச் சேர்த்தது” என்று உரைப்பது பொருத்தமிக்கதாகும். ஆதலால் பெருந் தேவனார் பாரதம் போலவே, தகடூர் யாத்திரையும் பழைய பாடலையும் புதிய உரைநடையையும் பெற்றிருந்தது என்று கொள்வதே பொருந்தும். அவ்வுரை நடையும், பேராசிரியர், நச்சினாக்கினியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர் ஆகியவர்கள் காலத்திற்கு முற்பட்டே அமைந்திருக்க வேண்டும். அவ்வுரைநடை இயற்றிய ஆசிரியரே தகடூர் மாலையைத் தகடூர் யாத்திரை என்னும் பெயரிட்டு வழங்கச் செய்தவர் ஆதல் வேண்டும். 'இராமாவதாரம்’ என்று கம்பர் இட்ட பெயர் பெயர் ‘இராமாயணமாக மாறிவிடவில்லையா! அதுபோல் என்க,

கி.பி.

மற்றும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் கங்க நாட்டில் ‘சம்பு' என்னும் ஒருவகை நூல்கள் இயற்றப்பெற்றன என்றும், அவை பாட்டும் உரையும் கலந்த கதை நூல்கள் என்றும் 3பல்லவர் வரலாறு கூறுகின்றது. அக்கால எல்லையிலேயே தகடூர் யாத்திரையின் உரைநடைப் பகுதி இயற்றப் பெற்ற தாகலாம்.

66

இஃதிவ்வாறாகத் தகடூர் யாத்திரையையே மிகப் பிற்கால நூலாகக் கருதுவார் 4பேராசிரியர் திரு வையாபுரிப் பிள்ளை. இது சரித்திர நிகழ்ச்சி பற்றிய நூலாயினும், அந் நிகழ்ச்சி நடைபெற்ற காலத்துத் தானே இயற்றப் பெற்றதன்று. மிகப் பிற்பட்ட காலத்திலே இது தோன்றியதெனக் கொள்ளல் வேண்டும். ஏனென்றால் இதனைப் பழையவாகிய கதைப் பொருளாகச் செய்யப்படுகின்ற தொன்மை என்பதற்கு இலக்கியமாகப் பேராசிரியர் காட்டுகின்றனர்” என்கிறார்.

இக் கருத்தை அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்5 தக்க முறையில் மறுத்துத் தங்கோள் நிறுவுகின்றார். ‘தகடூர் யாத்திரை என்னும் நூலில் நமக்கு இப்போது தெரிகிற வரையில் அரிசில் கிழாரும், பொன்முடியாரும் பாடிய

66

1.

2.

3.

4.

5.

பெருந்தேவனார் பாரதம் (கழக வெளியீடு) ஆராய்ச்சி முன்னுரை. பக். 20-23. திரு. அ. கோபாலையர்.

பல்லவர் வரலாறு, டாக்டர் மா. இராசமாணிக்கனார் பக். 396.7

புறத்திரட்டு முகவுரை. XIV

மறைந்துபோன தமிழ் நூல்கள் பக். 54-56