உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம்

-

12

பாடல்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு புலவர்களும் தகடூர்ப் போர் நடந்த காலத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தில் இருந்தவர்கள் என்பது இவர்கள் பாடிய பாடல் களினால் தெரிகிறது. தகடூரை வென்ற பிறகு தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையைப் பாடிப் பெரும்பொருள் பரிசு பெற்றதோடு. அவனுடைய அமைச்சராகவும் இருந்தவர் அரிசில்கிழார் என்னும் புலவர். இவர்களுடைய செய்யுள்கள் தகடூர் யாத்திரையில் காணப்படுகின்றன. இங்ஙனமாக இந்நூல் மிகப் பிற்பட்ட காலத்து நூல் என்று எவ்வாறு கூற முடியும்? நூலினுள்ளே அகச்சான்று இருக்கும்போது அதனைப் புறக் கணித்து மிகப் பிற்காலத்தில் இருந்தவர் எழுதியதைச் சான்றாகக் கொண்டு, மனம் போனபடி கூறுதல் உண்மைச் செய்தியைப் புறக்கணிப்பதாகும். உரையாசிரியர் கூறுவதில் தவறும் இருக்கக் கூடும். கூடும். நூலினுள்ளே அகச்சான்று கிடைக்கிற போது அதனையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும். அன்றியும் வீரச் செய்திகளைக் கூறும் நூல்கள் அந் நிகழ்ச்சிகள் நடைபெற்ற அதே காலத்தில் அல்லது அது நிகழ்ந்த அண்மைக் காலத்திலேயே தோன்றுவது வழக்கமாக உள்ளது. நமது நாட்டில் வழங்கும் நாட்டுப் பாடல்களே இதற்குச் சான்றாகும்” என்று விரித்துரைத்து மேலும் விளக்குவார்.

தில் உரையாசிரியர் தவறும் இல்லை என்பதை மேலே காட்டினாம். தகடூர் யாத்திரை பற்றி முதற்கண் குறிப்பிடும் உரையாசிரியர், பேராசிரியரே ஆவர். அவர் அரிசில் கிழார் பாட்டும் பொன்முடியார் பாட்டும் தகடூர் யாத்திரையில் உண்மையும், அவர்கள் சங்கச் சான்றோர் ஆதலையும், பெருஞ் சேரல் இரும் பொறை, அதியமான் எழினி ஆகியோர் சங்ககால வேந்தர் ஆதலையும் தெள்ளிதின் அறிந்தவர். சங்கப் புலவரைச் 1‘சான்றோர்' எனப் போற்றுபவர். ஆகலின் அவர் தகடூர் யாத்திரை பிற்கால நூல் எனக் கருதினார் என்பது பொருந்தாது. அவருரையைப் பிறழ உணர்ந்தமையே பிழையாயிற்றாம் என்க. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் இவ் வேந்தன் பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்திற்கு உரியவன்.

1. 'அவை சான்றோர் செய்யுளல்லவென மறுக்க.' செய் 8.

வனைப்