உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

9

பாடியவர் சங்கச் சான்றோர் ஆகிய அரிசில்கிழார். இவ் வேந்தர் பெருமானே, 'அறியாது முரசுக்கட்டிலில் துயின்ற புலவர் மோசிகீரனாரை வாள்வீசிச் சிதையாமல், கவரிவீசி நின்று பணி செய்த காவலன் ஆவன்.

"பெருஞ்சேரல் இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழி யாதனின் மைந்தன்; இவன் தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி; பல்வேல்தானை அதியமானோடு இருபெரு வேந்தரையும் னிலை வென்றவன் தகடூர் எறிந்தவன்” என்னும் செய்திகளைப் பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்துப் பதிகம் கூறுகின்றது. அன்றியும் தன்னைப் பாடிய புலவர் அரிசில்கிழார்க்கு வழங்கிய கொடைச்சிறப்பையும் பதிகம் கூறுகின்றது.“தானும் கோயிலாளும் (அரசியும்) புறம்போந்து நின்று. (அரண்மனைக்கு வெளியே வந்து நின்று) கோயிலுள்ள வெல்லாம் (அரண்மனையில் உள்ள வெல்லாம்) கொண்மின் என்று காணம் (பொன்) ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப (ஆட்சியை வழங்க) அவர் (அரிசில்கிழார்.) யான் இரப்ப இதனை ஆள்க என்று அமைச்சுப்பூண்டார்” என்பது அது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழு யாண்டு அரசுபுரிந்த செய்தியையும் பதிகம் கூறுகின்றது.

6

2குளவிக்கூட்டைக் கலைத்த இளஞ்சிறார்போலச் சேரனை எதிரிட்டோர் படும் துயரையும், 3ஊழித்தீப்போலப் பகைவரைச் சேரன் வாட்டுவதையும், “புலியைக் கொன்று களிற்றை அழிக்கும் வயமான் போன்று அவன் விளங்குதலையும், 5பலிகொண்டு பெயரும் பாசம்போலத் திறைகொண்டு பெயர்தலையும், “முழு துணர்ந்த நரைமூதாளனுக்கும் அறநெறி இஃதென அறி வுறுத்தும் அறிவு மேம்பாட்டையும், 7“புகார்ச் செல்வனாகவும், பூழியர் மெய்ம்மறையாகவும், கொல்லிப் பொருளனாகவும், கொடித்தேர்ப் பொறையனாகவும் பிற ருவமமாகா ஒரு பெரு வேந்தனாக 8 அவன் கொடை மாண்பையும், நன்மகப்பேற்றையும்’ 10கழுவுள் என்பான் தலைமடங்குதலையும், "தகடூர் அழிப்பையும், 12யானைப் படைப் பெருக்கத்தையும் சுட்டுகின்றார். அரிசிலார், சேரனின் பகைவர் அழிபாட்டுக்கு வருந்தித் 13தூது

9

3. பதிற். 72

6.

பதிற். 74

1.

புறம் 50

2. பதிற். 71

4.

பதிற். 75

5.

பதிற். 71

7.

பதிற். 73

8.

பதிற். 76

9.

பதிற். 74

10. பதிற். 71

11. பதிற். 78

12. பதிற். 77

13. பதிற். 73