உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம்

12

சென்றும் வென்றி காணாராய் உருகிய உருக்கம் ஒருபாட்டில் புலப்படுகின்றது.

இச் சேரன் தகடூரை அழிக்கும் வரை பெருஞ்சேரல் இரும்பொறைப் பெயரோடே இருந்தான். தகடூர் வெற்றி அந்நாளில் ஈடும் எடுப்பும் அற்ற வெற்றியாகக் கருதப்பெற்றது; தமிழ்நாட்டு வீரர்கள் வேந்தர்கள் புலவர்கள் உள்ளங்களை யெல்லாம் கொள்ளைகொண்ட சிறப்புடையதாயிற்று. ஆதலால் அவன் ஏனை வெற்றிகளும் பெற்றானாகவும் தகடூர் வெற்றி ன்றனையே அவன் பெயருடன் சான்றோர் இணைத்துக் கொண்டனர். மேனிலைப் பட்டம் பெற்றார் அதிற்றாழ்ந்த பட்டங்களைப் பாராட்டாமையும் குறிக்காமையும் இந்நாள் வழக்கன்றே. அத்தகைத் தென்க, “தகடூர் எறிந்த விருது. இவ்வாறே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பார் பெயர்களும்

கருதுக.

எறிதல் என்பது அழித்தல்; சவட்டுதல் என்பதும் அது; தகடூர் எறிதலைக் குறிக்கும் பதிற்றுப்பத்து ‘தகடூர் நூறி' என்கின்றது. நூறு என்பது துகள்; தகடூரை அழித்துப் புழுதி யாக்கியமையைப் புலப்படுத்தும் சொல் நூறி என்பதாம். அதன் காவல் திறத்தையும், காப்போர் உரத்தையும்,

“பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பில் தகடூர் நூறி”

என்கின்றது பதிற்றுப்பத்து.

சேரன் தகடூர் வெற்றியை இவ்வொரு பாட்டளவில் நிறுத்த விரும்பாத அந் நாள் புலவருலகம்; ‘தகடூர் யாத்திரை’ என்னும் நூலையே பாடிப் பரவியது. அவர்கள் கொண்ட வீர வழிபாடு அது. பின்னாளைத் தமிழ்ப் புலவர் உலகமோ, அந் நூலையும் போற்றிக் காக்கும் திறந்தானும் இன்றி ஒழிந்தது !

அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி

அதியர் என்பார் உதியர் என்பார்போல ஒரு குடியினர். அவர்தம் அரசராயினார், சேரர், மலையர் என்பார்தம் அரசர் சேரமான், மலையமான் எனப் பெயர் விளங்கினாற்போல்

1.

பதிற். 78