உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

11

அதியமான் எனப் பெயர்பெற்றனர். எழினி என்பதும் அக் குடியின் அரசர் பலர் கொண்டிருந்த பெயரே யாம்.

அதியனை ‘அதிகன்’ என வழங்கும் வழக்கம் பழங்காலந் தொட்டே உண்டு என்பதை,

1“வெள்ளத் தானை அதிகற் கொன்று"

266

‘பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன்'

99

என்பன முதலாக வரும் சான்றோர் வாக்குகளால் அறியலாம். உதியன் என்பான் உதிகன் ஆகாமைபோல் அதியன் என்பான் அதிகன் ஆகாமைப் போற்றுதலே பொருத்தமாம். அதிகன் என்பது ஏடுபெயர்த் தெழுதியோரால் ஏற்பட்டதாகலும் கூடும்.

.

தமிழகத்தின் ஆட்சியில் பன்னூற்றாண்டுக் காலம் தனிப் பெரும் புகழுடன் உலா வந்தவர் அதியமான்கள். அவர்கள் கி. பி. 12. ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்து செயற்கரும் செயல்கள் செய்ததை அறிஞர்கள் ஆய்ந்து கூறுவர்.

சங்கச் சான்றோர்களால் பாடு புகழ்பெற்ற அதியமான் ஒருவன் அல்லன்; பலர் ஆவர். ஆனால், அதியமான் என்றவுடன் நமக்கு நேரே காட்சி வழங்கும் பெருமகன் ஔவையாரால் பாடு புகழ்பெற்ற அதியமான் நெடுமான் அஞ்சி ஒருவனே யாவன் அவன், தன் குடிப்புகழை எல்லாம் தன்புகழ் ஆக்கிக்கொண்ட பருமையாளன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

-

"தகடூர்ப் போரில் வீழ்ந்துபட்டவன் ஔவையார் பாடல் பெற்ற அதியமானே; தகடூர் யாத்திரையில் குறிக்கப்பெறுபவன் அவனே” என்று 3ஆராய்ச்சியாளர் பலரும் கூறுவர். இக் கூற்றின் உண்மையை ஆராய்தல் இன்றியமையாததாம்.

(1) அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடிய பாடல்கள் 22. அவையனைத்தும் புறநானூற்றைச் சேர்ந்தவை.

1. அகம். 142

2.

3.

குறுந். 393

திரு.புலவர் பாண்டியனார் தாம் இயற்றிய ‘எழினி' என்னும் நூலில், “அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியும், அதியமான் நெடுமான் அஞ்சி எழினியும் ஒருவன் அல்லர்’ என்பாராயினும், “அதியமான் நெடுமான் அஞ்சியால் கொல்லப்பட்டவன் வேறோர் எழினி” என்பார். பக்.26-30.

66

‘அதியமான் நெடுமாய் அஞ்சியின் மகன் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி” என்பார் திரு. மயிலை சீனி.வேங்கடசாமி, - மறைந்துபோன தமிழ் நூல்கள் பக்.53.