உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம்

12

அவர், குறுந்தொகையுள் "வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி”யையும் (80) நற்றிணையுள் ‘நெடுமானஞ்சி தேர் வீசு இருக்கை” யையும் (381) பாடுகின்றார். இவற்றுள் எந்தப் பாடலிலும் அதியமான் தகடூர் முற்றுகைச் செய்தியோ, தகடூர்ப் போர்ச் செய்தியோ குறிக்கப்பெற்றில.

(2) அதியமான் நெடுமான் அஞ்சி பொருது புண்பட்டு நின்றோனைப் பாடிய பாட்டிலேனும் (புறம். 93) அவனுக்கு இரங்கிக் கூறிய கையறு நிலைப் பாடல்களிலேனும் (231, 232, 235) தகடூர்ப் போர்ச் செய்தி குறிக்கப்பெற்றிலது.

(3) அதியமான் செய்த போர்களாக ஒளவையார் குறிப் பன எல்லாம், கோவலூர் முதலாகச் 'சென்று சென்று அவன் தாக்கிய போர்களே அல்லாமல், தகடூரிடை இருந்து செய்த போர் அன்று.

66

(4) "கன்றம ராயம்' எனத் தொடங்கும் புறப்பாடல் (230) அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில்கிழார் பாடிய கையறுநிலைப் பாடலாகும். அரிசில்கிழார், தகடூர் யாத்திரைக் காலத்தில் உடனிருந்து பாடிய புலவர்களுள் ஒருவர். அவர் பாடிய கையறு நிலைப் பாடலை (230) அடுத்துவரும் பாடலும் பொதுவியல் கையறு நிலைப் பாடலே. ஆகலின், திணையும் துறையும் அவை” என்னும் குறிப்புள்ளது. ஆனால் பாடினோரும் பாடப்பட்டோரும் வேறானவர் ஆகலின், “அதிய மான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது குறிக்கப்படுகிறது. இஃது அவ்விருவரும் வேறானவர் என்பதை வெளிப்படுத்தும். அன்றி, “அவனை அவர் பாடியது” என்றுள்ள பாட வேறுபாடே பொருந்துவதாயின் 231, 232 ஆகிய புறப் பாடல்கள் இரண்டும் அரிசில்கிழார் பாடியனவாகவே அமையும்.

1. புறம். 91. “ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை

""

25

25

29

ஆர்கலி நறவின் அதியர் கோமான்

92. “கடிமதில் அரண்பல கடந்த நெடுமானஞ்சி”

93. "சென்றமர் கடத்தல் யாவது?”

97. “உடன்றவர் காப்புடை மதிலழித்தலின்

""

""

"குறும்படைந்த அரண் கடந்து

“எழூஉத் தாங்கிய கதவு மலைத்தவர்”

98. "முனைத் தெவ்வர் முரணவிய”

99. “சென்றமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய” “கோவலூர் நூறி”

103.“பகைப் புலத்தோனே பல்வேல் அஞ்சி”

எனக்