உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

13

ஆனால் ஔவையார் பாடலாகவே இதுகாறும் கொள்ளப் பெறுகின்றன.

(4) அதியமான் தூதுவிடத் 'தொண்டைமானுழைத் தூது சென்றவர் ஒளவையார். அத்தகைய அதியமான் பெருஞ்சேரல் இரும்பொறை விடுப்பவந்த அரிசில்கிழார் தூதினைப் புறக் கணித்திருக்கமாட்டான். ஔவையாரும் அரிசில்கிழார் முயற்சிக்கு உறுதுணையாக நின்று ஒல்லும் வகையால் சந்து செய்திருப்பாரே அல்லாமல் ஒதுங்கிப்போய் 'வாளா' விருக்கமாட்டார்.

·

(6) ஔவையாரால் பாடப்பெற்ற சேரவேந்தன், மாவண்கோ (மாரிவெண்கோ) என்பான். அவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின்னே அரசுகட்டில் ஏறிய குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையின் வழியில் தோன்றிய யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் பின்னே அரியணையேறிய சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதியை ஆட்சி செய்தவன்? என்பர். ஆதலால் ஒளவையாரால் பாடப் பெற்ற அதியமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை காலத்தான் அல்லன்.

(7) பதிற்றுப்பத்துப் பதிகம்,

“கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப் பல்வேல் தானை அதிக மானோடு

இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று”

என்று கூறியதை அல்லாமல், அவன் அதியமான் நெடுமான் அஞ்சி எனக் கூறிற்றில்லை. இவ்வாறாகவும், ஆராய்ச்சியாளர் பலரும் அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறித்ததற்குக் காரணம் இல்லாமல் போகவில்லை. அதற்கு அடிப்படையாக அமைந்தது ஆசிரியர் நச்சினார்க்கினியர் தரும் ஒரு குறிப்பேயாம். தொல்காப்பியப் புறத்திணை இயல்,

66

'எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்

அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”

என்னும் நூற்பாவின் (7) விளக்கத்தில், “ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம் மண்ணழியாமல் காத்தற்கு எதிரே

1.

2.

72

புறம். 95.

பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறு. பக். 293.