உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

14

இளங்குமரனார் தமிழ்வளம்

12

வருதலின் இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உள தாகலின் அவ்விருவரும் வஞ்சி வேந்தரே ஆவார் என்றுணர்க..... ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன் மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின் அஃதுழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை, அதிகமான் இருந்ததாம் என்று வரைந்தார். இதில் அதிகமான் என வந்தது கொண்டு அதியமான் நெடுமான் அஞ்சியே அவன் எனக் கருதினர். நச்சினார்க்கினியர் உரைத்த ‘அதிகமான்’ அதியமான் தகடூர்ப் பொருதுவீழ்ந்த எழினியே எனக் கொள்ளல் சால்பாம்.

இனி,

நச்சினார்க்கினியர் உரையால், அதியமான் நெடுமான் அஞ்சி அடைமதிற்பட்டிருந்ததாகக் கருதிக்கொண்டு அந்நிலையில் ஒளவையார்,

“உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடைமல்கு குளவியொடு கமழும் சாரல் மறப்புலி யுடலின் மான்கணம் உளவோ மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய

இருளு முண்டோ ஞாயிறு சினவின் அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய

பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய

வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும்

பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?

எழுமரம் கடக்கும் தாள்தோய் தடக்கை

வழுவில் வண்கை மழவர் பெரும

இருநில மண்கொண்டு சிலைக்கும்

பொருநரும் உளரோ நீகளம் புகினே”

என்னும் புறப்பாடலைப் பாடிப் (90) போர்க்கு ஏவினார் என வரலாறு புனைந்தாரும் உளர். இப்பாடல் தும்பைத்திணைத் தானை மறப் பாடல் என்பதையும், 87 ஆம் பாடல் முதல் 90ஆம் பாடல் முடிய அத்திணையும் அத்துறையும் அமைந்தவையே

1.

“பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலிற்

செறாஅ தோச்சிய சிறுகோல் அஞ்சியொடு”

என்னும், பொன்முடியார் புறப்பாட்டில் (310) வரும் அஞ்சி என்பதையே 'அதியமான் நெடுமான் அஞ்சியாகக் கொண்டாருளர். சிறுகோலுக்கு அஞ்சுபவன் ‘சிறுகோல் அஞ்சி' எனப் பெற்றான் என்க. இஃததியமான் நெடுமானஞ்சியின் புகழ் மயக்கமே என்க.