உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம்

12

றெறிந்து பட்டனன்' என்பதை அறிந்து ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தாள் என்றும், அவள் வார்த்த உவகைக்கண்ணீர் நோன்கழைப் பொழிந்த மழைத்துளியினும் சாலப்பல என்றும் பிறரும் கூறினார். இக் கருத்தானன்றே மறக்குடி மைந்தன் களத்தில் பட்டகாலை அவன் மனையாள் கண்டு தழுவுதலை இரங்குதல், கையறுநிலை, கையாறு, கையறவு என்றெல்லாம் கூறாமல் ‘உவகைக்கலுழ்ச்சி' என்று புறப்பொருள் இலக்கணம் கூறியதூஉம் என்க.

-

வாள்வாய் முயங்கிய முயங்கிய மைந்தனை அவன் விழுப் புண்ணைத் தான் முயங்குதல் தனக்குத் தருமமும், தானமும், கருமமும் ஆம் என விரித்துரைத்தும் கொள்க.

வாய்வாள்' எனின் தப்பாத வாளையும், 'வாள்வாய்' எனின் வாளின் வாய்ப்புறத்தையும் குறித்தல் கொள்க (புறம். 91;50)

17. மூதில் மறம் - 2 நேரிசை வெண்பா

39. இன்பம் உடம்புகொண் டெய்துவீர் காண்மினோ; அன்பின் உயிர்மறக்கும் ஆரணங்கு - தன் கணவன் அல்லாமை உட்கொள்ளும் அச்சம் பயந்ததே புல்லார்வேல் மெய்சிதைத்த புண்.

(38)

(இ-ள்) பொய்யாய் ஒழியும் உடலைக்கொண்டு இன்பம் அடைவீர்களே பொருந்தாதார் ஆகிய பகைவர் வேல் தைத்துத் தன் கணவன் மெய்யைச் சிதைத்ததால் உளதாகிய விழுப்புண், அவன் அல்லாமல் தனித்துண்டு வாழும் கைம்மை யச்சத்தைத் தந்ததாம்; ஆகலின் அவன் அன்பினையே கருதித் தன் உயிர் வாழ்வையே மறந்துவிடும் மூதின் மகளைக் காண்மின்கள் ! என்றவாறு.

இ-து:- கணவன் போர்க்களத்தில் புண்ணுற்று மடிந்த காலை, மூதின்மகள் கைம்மை கொண்டு வாழாள், தானும் உயிர் நீப்பாள் என்பது சொல்லியது.

(வி-ரை) உடம்பு கொண்டு இன்பம் எய்துவதை எண்ணாத மூதின்மகளின் மாண்பைக் கூறுகின்றார் ஆகலின்,