உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

'இன்பம் உடம்புகொண் டெய்துவீர் காண்மினோ”

165

என விளித்துக் கூறினார். ஐம்புல நுகர்வும் உடல்கொண்டு நுகரப்பெறுவன ஆகலின் உடம்புகொண்டு இன்பம் எய்துதல் வெளிப்படையாம். ஆனால் அவ்வின்பத்தினும், நினைவால் எய்தும் இன்பமும், உயிரால் எய்தும் இன்பமும் படிப்படியே உயர்ந்தனவாம். முடிநிலை இன்பமாம் உயிரின்பம் நாடிய மூதின்மகள் உடம்புகொண்டு இன்பம் எய்துதலை எண்ணு வளோ? எண்ணாள் என்க.

அன்பு, கணவன்மேல் கொண்ட அன்பு; அவன் தன்மேல் கொண்டிருந்த அன்புமாம். அவ்வன்பால் தன்னை - தன் உயிர் வாழ்வை மறந்தாள். அன்பின் வழியது உயிர்நிலை ஆகலின் அவ்வழி நின்றாள்.

-

மூதின்மகளுக்கு அச்சம் தோன்றுவது இல்லை. அவள் குடிச்சிறப்பு அது. ஆனால், தன் கணவன்பட்ட விழுப்புண் அச்சத்தை அவளுக்கு ஊட்டியது. ஏன்? அவனை இழந்து கைம்மை நிலையில் வைத்தது ஆகலின். அதனால் அவ் வச்சத்தை ஆட்சி நடாத்துமாறு விட்டுவைக்க விரும்பாதவளாய்த் தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடிச்சென்றாள் என்க. இறப்பில் இணைவாரை அச்சம் அடர்க்கவல்லதோ?

பொருகளத்தில் புண்பட்டு மறக்குடி மைந்தன் மாண்டானாக, அவன் ம னயாள் அவனைத் தழுவிக்கிடந்த தழுவிக்கிடந்த தன்னுயிர் நீப்பாளைக் கண்ட முதியோர் கூற்று இது.

கணவன் அல்லாமையால் அச்சம் நிகழ்தலைச் சங்கப் பாடல்கள் விரித்துக் கூறும். அவை கூந்தல் கொய்தலும், குறுந்தொடி நீக்கலும், அல்லி அரிசி அருந்தலும், அணிநலம் சிதைத்தலும், பாயின்று வதிதலும் பழஞ்சோறுண்ணலும் பிறவுமாம். இவற்றைச் சான்றோர் செய்யுளுள் விரியக் கண்டு கொள்க. (புறம். 25, 248, 249, 250, 253, 254, 261, 280).

17. மூதில் மறம் 3

நிலைமண்டில ஆசிரியப்பா

40. வாதுவல் வயிறே! வாதுவல் வயிறே!

நோலா அதனகத் துன்னீன் றனனே; பொருந்தா மன்னர் அருஞ்சமம் முருக்கி அக்களத் தொழிதல் செல்லாய்; மிக்க

(39)