உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம்

12

புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம்

அதன்முகத் தொழிய நீபோந் தனையே;

எம்மில் செய்யா அரும்பழி செய்த வென்வேல் விடலையை ஈன்ற வயிறே.

புறத். 1407

இ.ள்) வயிற்றை அறுப்பன்; வயிற்றை அறுப்பன்; மறக் குடிக்கு வாய்த்த வீரநோன்பினைக் கொள்ளாத நின்னை அவ்வயிற்றிடத்தே கொண்டு ஈன்றனன்; கூடாமன்னர் கூடிநின்ற வெலற்கரிய போர்க்களத்தில் அவர்களைச் சவட்டி அக் களத்தின் கண்ணே ஒழியாது நீ ஒழிந்தனை; மிகப் பலவாய புள்ளிகளைக் கொண்ட யானையின்மேல் எறிந்த வேல் அதன் முகத்தே தங்கி ஒழியவும் நீ அதனைப் பறியாதே விடுத்த இவண் வந்தனை; ஆகலின் எம் மறக்குடியினர் செய்தறியாத பெரும் பழிசெய்த வெற்றிவேலைக் கொண்ட காளையைப் பெற்ற வயிறே! என்றவாறு.

இ-து:- யானையின்மேல் ஏவிய வேல் அதனோடு தங்கி விட அதனைப் பறியாமல் களத்தில் இருந்து மீளல் மறக் குடிமைந்தர்க்கு மாயாப் பழியாம் என்பது சொல்லியது.

(வி-ரை) இவனைப் பெற்ற வயிறுடையாள் என்ன நோன்பு நோற்றாளோ என்று பெருமை தரும் வயிறே பழிக்கு இடமான மைந்தனை வைத்திருந்ததாகலின், மைந்தன் செய்த பழிச் செயற்கு அடிப்படையாக அமைந்த தன் வயிற்றை நொந்து “வாதுவல் வயிறே; வாதுவல் வயிறே’ என்றும், “ஈன்ற வயிறே” என்றும் கூறினாள். “மன்னு புகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே" என ஆழ்வார் அருளுதல் வண் எண்ணி மகிழத்தக்கதாம்.

மைந்தன் செய்த குற்றத்திற்கு அவனை நோவாமல் அவனைப் பெற்ற தன் வயிற்றை நொந்துகொண்டமை முந்நூறுநாள் சுமந்து திரிந்த காலத்தும், முழுமகவாய்ப் பிறந்து வளர்ந்த காலத்தும் முதுகுடிப் பண்புக்கு ஏற்ப வளர்த்து வழிகாட்டாமை தன் குற்றமென முற்றுங் கருதியமை குறித் தென்க.

களத்தில் வீழ்ந்துபட்டிருந்தாலும் களிப்புறுவேன்; ஆனால் களிற்றின் முகத்தில் வேலை விடுத்து அதனைப் பறிக்காமல் திரும்பிய பழியே என்னால் தாங்க வொண்ணா மானக்கேடு என்பாளாய், " ஆங்கொழிதல் செய்யாய்" என வெறுத்துக் கூறினாள்.

66