உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

167

கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் னிது” என்பது பொதுநெறி ஆயினும் மறக்குடிக்குரிய மாண்பு அவ்வளவில் அமைவது இன்றி; யானை முகத்தில் ஆழ்ந்து போழினும் அவ்வேலைப் பறிக்காமல் விட்டுவருதல் இழிவெனவேபடும். ஆகலின் மூதின் மகள் அச்செயலைக் கேட்கவும் ஒண்ணாள். சாவு என்பதைக் கேட்டும் களிப்புறும் அவள், சால்பிழந்தான் என்பதைக் கேட்கப் பொறாள். ஆகலின் தன் குடியில் பிறந்தவன் என்று பெயரளவிலும் கொள்ளக் கருதாளாய் ‘நம்மில்' என்றோ 'நும்மில்' என்றோ கூறாளாய் ‘எம்மில்' செய்யா அரும்பழி என்றாள்.

விடலை கொண்டுசென்ற வேல் இப்பொழுது அரும் பழிக்கு ஆளாகியதை அன்றி முன் எக்காலத்தும் ஆளாகியது இல்லை; என்றும் வழிவழியாக வெற்றிகொண்டு விளங்கிய வேல் என்பாளாய் 'வென்வேல்' என்றாள். அவ்வேலுக்கும் இழிவு நேரக் களிற்றின் முகத்தில் விடுத்து மீண்டனன் என்பது குறிப்பு.

மூதின்மகள் கொண்ட மானவீரம் மண்ணுக்குத் தனிப் பெரும் புகழ் சேர்க்கும் வீரச் செய்தி என்பதில் எட்டுணையும் ஐயமின்றாம். என்னே அவள் குலத்தில் குன்றாக் கொழுங்குடி மாண்பு!

செல்லாய், எஃகம் புகர்முகத் தொழியப்போந்தனை; நின்னீன்றனன்; வாதுவல் வயிறே” என இயைக்க.

"இத் தகடூர் யாத்திரை கரியிடை வேல் ஒழியப் போந்ததற்குத் தாய்தப வந்த தலைப்பெயனிலை" என்பார் நச். (தொல். பொருள். 79)

தப - இறந்துபட. தாய் இறந்துபடுமாறு மைந்தன் இறத்தல் தாய்தபவந்த தலைப்பெயனிலை யாகும்.

66

"இன்கதிர் முறுவற் பாலகன் என்னும்

தன்கடன் இறுத்ததாய் தபுநிலை யுரைத்தன்று”

என்றும்,

66

"இடம்படு ஞாலத் தியல்போ கொடிதே

தடம்பெருங்கட் பாலகன் என்னும் - கடன்கழித்து முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரணவியா வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய்”