உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ்வளம்

12

என்றும் இதன் இலக்கணமும் இலக்கியமும் காட்டும் புறப் பொருள் வெண்பாமாலை (258).

17. மூதில் மறம் – 4

நிலைமண்டில ஆசிரியப்பா

41. எற்கண்ட டறிகோ? எற்கண் டறிகோ? என்மகன் ஆதல் எற்கண் டறிகோ

கண்ணே, கணைமூழ் கினவே; தலையே, வண்ண மாலை வாள்விடக் குறைந்தன;

வாயே, பொருநுனைப் பகழி மூழ்கலிற் புலால்வழிந் தாவ நாழிகை அம்புசெறித் தற்றே;

நெஞ்சே, வெஞ்சரங் கடந்தன; குறங்கே

நிறங்கரந்து பல்சரம் நிறைத்தன; அதனால்

அவிழ்பூ அப்பணைக் கிடந்த காளை

(40)

கவிழ்பூங் கழற்றிண் காய்போன் றனனே.

புறத் 1406

(இ-ள்) எதனைக் கண்டு அறிவேனோ? எதனைக் கண்டு அறிவேனோ? என்மகன் ஆவன் இவன் என்பதை எதனைக் கண்டு அறிவேனோ? கண்ணைக் கண்டு அறிவேன் எனின், கணைகள் கண்ணில் மூழ்கி உருவழித்தன; தலையைக் கண்டு அறிவேன் எனின், ஒளியுறச் சுழலும் வாள் தொகுதிகள் ஒருங்கு படுதலால் சிதைவுகள் மிக்கன; வாயைக் கண்டு அறிவேன் எனின், வரிய நுனைவாய்ந்த அம்பு மூழ்குதலால் ஊனும் குருதியும் வழிந்து கணைப்புட்டிற்கண் கணை செறிந்திருந்தாற் போன்றது; மார்பினைக் கண்டு அறிவேன் எனின், வெவ்விய கணைகள் துளைத்துச் சென்று உருவழித்தன; இனித் தொடை களைக் கண்டு அறிவேன் எனின், அவற்றின் உண்மை நிறம் ஒழிந்துபட்டுப் பலப்பல அம்புகள் நிறைந்து நின்றன; ஆகலின் விரிமலர்ப்பூப் போன்ற அம்புப் படுக்கையில் கிடந்த காளை, கவிழ்ந்த பூக்களையுடை ய வலிய கழற்காயைப் போன் றமைந்தனன்; இத்தன்மை இருந்தவாறு என்னே! என்றவாறு.

இ-து:- கண்ணும், தலையும், வாயும், மார்பும், தொடையும் சிதைந்து பட்டனன்; அம்பணையிற் கிடந்தனன்; இவனை என்மகன் என எதனைக்கொண்டு அறிவேன் என மூதிற்பெண்டு அரற்றுதல் சொல்லியது.