உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

169

(வி-ரை) தன்மகன் பட்டழிந்து கிடத்தலைக் கண்ட மூதின் மகள் ஒவ்வோர் உறுப்பின் சிதைப்பாட்டையும் கூறிக் கூறி அரற்றியது. அவலம் மீதூரப் பெற்றனள் ஆகலின் ஆகலின் எற் கண்டறிகோ என அடுக்கிக் கூறினாள்.

கண்ணே மணியே எனச் சீராட்டி வளர்த்தனன் ஆகலானும் கண்ணிற் சிறந்த உறுப்பில்லை ஆகலானும் முதற்கண் கண்ணழிந்து பாட்டை உரைத்தாள். கண்ணேயன்றி முகமும் உச்சியும் கழுத்தும் வாளால் போழப்பட்டுக் கிடத்தலின் 'தலையே வண்ண மாலை வாள்விடக் குறைந்தன' என்றாள். குறைந்தன எனும் பன்மை வெட்டுண்ட புண்களின் பன்மை சுட்டி நின்றது. வண்ணம் - ஒளி; மாலை - தொகுதி. பல்லோர் கூடி நின்று தன் ஒருமகனைத் தாக்கினராகலின் 'மாலை' என்றாள். இனி அழகிய மாலை யணிந்தவன் எனின் வாளுக்கோ, வீரனுக்கோ பெருமையின்றாகலின் பொருளன்மை உணர்க.

ஆவநாழிகை கணைப்புட்டில். வாய்க்குள் கணைகள் செறிந்து தைத்துக் குத்திட்டு நின்றன ஆகலின் கணைகள் நிரம்பியுள்ள கணைப்புட்டில் போலக் காட்சி வழங்கியமை குறித்தாள்.

6

வெஞ்சரம் கடத்தல் ஊடுருவிப் போதல். வீரர்க்கு நிறப் புண் படுதல் அன்றிப் புறப்புண் பாடு இன்று. ஆயின் நிறத் புறப்பாடு துப்பட்ட அம்பும் வேலும் புறத்து வெளிப்பட்டன்றே, பிறர் புறப்புண்ணென எள்ளுவர் என எண்ணி வெண்ணிப் பறந் தலையில் சோழன் கரிகாலனொடு பொருத சேரமான் வடக்கிருந்து உயிர்துறந்தான். அத்தகு புண்ணுற்றான் இவ் வீரன் என்க.

எதிரிட்டார் அனைவரும் விற்போர் வீரர் ஆகலின் அவன் உடலெங்கும் அம்பே துளைத்தன. கணை, பகழி, அம்பு, சரம் என்பன ஒரு பொருட் கிளவிகள். ஒரு சொல்லையே ஆளாமல் அப் பொருள் குறித்த பல சொற்களைக் கையாண்டது நயமிக்கதாம்.

உடலெல்லாம் அம்பு குத்திட்டுக் கிடந்த வீரனுக்கு உவமை கூறுவாராய்க் கழற்காயைக் குறித்தார். சூழவும் முள்ளைக் கொண்ட காய்க்கு அம்பணையிற் கிடந்தானை உவமை காட்டுதல் நனிபெரும் சிறப்பினதாம். வீடுமன் அம் பணையில் கிடந்ததும், அவற்கு அணையாக அருச்சுனன் அம்பு ஏவி நிறுத்திவைத்ததும் பாரத வெண்பா உள்ளம் உருகும் வண்ணம் உரைத்தல் இவண் நோக்கத்தக்கதாம். அம்பணை அப்பணையாயது வலித்தல் வேறுபாடாம்.