உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம்

12

மார்பில் வேல்கள்பட்டுச் சூழ நிற்றலை வண்டிக் குறட்டில் (குடத்தில்) ஆர்க்கால் நிற்பதற்குப் ஒப்பிட்டுக் காட்டினார் சங்கச் சான்றோர்.

“ஆர்சூழ் குறட்டின் வேல்நிறத் திங்க”

என்றும்,

66

“நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின்”

(புறம். 283)

(மதுரைக். 742)

என்றும் கூறினார். இனி வேல் பாய்ந்து நிற்கும் உடலைக் கறுக்கு மட்டையுடன் நிற்கும் பனைமரத்திற்கு ஒப்பிட்டும் கூறினர்.

“நெடுவேல் பாய்ந்த மார்பின்

மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே”

என்பது அது.

வாளின்மேல் கிடந்த வீரன் ஒருவனை,

“விழுநவி பாய்ந்த மரத்தின்

வாள்மிசைக் கிடந்தான்

""

(புறம். 297)

என ஒரு புறப்பாட்டுக் கூறும் (300). ஆனால் அம்பணையில் கிடந்த வீரனைத் தகடூர் யாத்திரை கூறுமாறே,

"மொய்படு சரங்கள் மூழ்க முளையெயிற் றாளிபோல

அப்பணைக் கிடந்த மைந்தன்....

பொலங்கழற் காயு மொத்தான்

99

எனச் சிந்தாமணி கூறுவது (2287) ஒப்பிட்டு மகிழத்தக்கதாம். இன்னும்,

“கதிரவன் காதல் மைந்தன் கழலிளம் பசுங்காய் என்ன எதிரெதிர் பகழி தைத்த யாக்கையன்”

என இராமாயணம் கூறுவதும் (நாக. 200) உன்னி மகிழ்க.

66

கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற்

சென்ற உயிரின் நின்ற யாக்கை

இருநிலம் தீண்டா வகை

وو

என்னும் புறத்துறைக்கு (தொல். புறத். 16) வாய்த்த புகழ்மிக்க எடுத்துக்காட்டு இத் தகடூர் யாத்திரைப் பாட்டாகும்.