உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

171

மேற். இத் தகடூர் யாத்திரை துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கோளன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை என்பார் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். 79) இதனால் நெடுங் கோளன் என்பான் பெருவீரன் என்பதும், அவன் தகடூர்ப் போரிடைப்பட்டு வீழ்ந்து அமரன் ஆனான் என்பதும், அவன் தாய் தானும் இறந்துபட்டாள் என்பதும் விளக்கமாம்.

18. இரங்கல் - 1

-

(41)

மண்ணவர் மயங்க விண்ணுலகு சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்த வருந்தியது. கையறு நிலை என்பதும் இது. இதனை,

“வெருவரும் வாளமர் விளிந்தோற் கண்டு

கருவி மாக்கள் கையற வுரைத்தன்று

என்றும் (31)

66

'வியலிடம் மருள விண்படர்ந்தோன்

இயல்பேத்தி அழிபிரங் கின்று

என்றும் (80) புறப்பொருள் வெண்பாமாலை கூறும்.

நேரிசை வெண்பா

42. இரவலர் வம்மின் எனவிசைத்தல் இன்றிப்

புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரையழுங்க வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ண போலுத் துடி.

புறத். 1438.

இ-ள்) “இரவலர்களே வருக” என்று அழைத்தல் இல்லா மல் இரவலர்க்குப் புரவலனாக அமைந்தவன் இறந்த பொழுதும் முன்னைப் போலவே முழங்கும்; வாய்ச்சொல் வெளிப் படாமல் அடங்கி ஒழிய வேல்போன்ற கண்ணையுடைய உரிமை மகளி ரின் கொடிய அரற்றொலி கேட்டும் அடங்காத தோற்கண்களை யுடையனவே போலும் இத் துடிப்பறைகள் என்றவாறு.

இ-து:- தலைவன் இறந்த தாழாத் துயரைத் துடியின் மேல் வைத்துச் சொல்லியது.

(வி-ரை) முரசு போர்முரசு, மணமுரசு, கொடைமுரசு என முத்தொழில் வகைக்கும் முழங்கும் மூவகைத்து, அது, கொடை