உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம் 12

66

த்

வழங்குதற்குரியான் இருந்தபோது இசைத்தவாறே இரங்கலின்றி இசைத்ததாகலின், இத் துடியின் கண்கள் அருட்கண்கள் அல்லைகாண்; தோற்கண்களே; அருட் கண்ணவாயின் அழுங்கல் இன்றி ஆரவாரிக்குமோ?” என்றான் என்க.

அருட்கண் என்பது பிறர்துயர் கண்டுழி ஆற்றாமைப் பாடும், அரிதின் உதவுதலும் அன்றே; ஆற்றாது அழுவார் இடையும் உணர்வின்றி ஓயாது முழங்கும் இஃது என்னே என அவ்வொலி கேட்டு இரங்கினான் ஒருவன் அதன்மேல் வைத்துத் தன் அவலம் உரைத்ததாகும்.

துடியின்கண் கோல் தாக்குறும் இடம் கண்ணெனப் படும். அக் கண் இருபுறத்தும் உண்டாகலின் இணைக் கண்களுக்கு உவமையாயிற்று. பெயரளவால் தேங்காய்க் கண், நுங்குக்கண், மூங்கிற்கண், தோகைக்கண், சிலந்திக்கண், வேற்கண், கோற்கண், என்பனபோலத் தோற்கண் எனப் பேசப்படுவதன்றிப் பெருந் தக்க செயல் இல்லை என இகழ்ந்தானாம்.

"மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப

இருங்கட் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச் சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப

உழவர் ஓதை மறப்ப விழவும்

அகலுள் ஆங்கண் சீறூர் மறப்பப்

புரவலன் மடியவும்,

(புறம். 65)

“தொடிகழி மகளிரிற் றொல்கவின் வாடிப்

பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே;

ஆளில், வரைபோல் யானையும் மருப்பிழந் தனவே”

என்றிரங்கத் தலைவன் பெரும்பிறிதாகவும்

(புறம். 238)

இரங்காத

கண்ணைத் தோற்கண் என்பதல்லது வேறென்ன சொல்வேன் என்று இரங்கினான் என்க. தன் ஆற்றாமையைத் துடிமேல் ஏற்றி யுரைத்த நயம் பாராட்டற்குரிய தாம். “இளையோர் சூடார் வளையோர் கொய்யார்” என்னும் புறப்பாட்டியல் (242) "முல்லையும் பூத்தியோ” என முல்லையின்மேல் வைத்துத் தன் கையறு நிலையை உரைத்தது உணர்ந்து மகிழத்தக்கதாம்.

(42)