உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

18. இரங்கல் - 2

நேரிசை ஆசிரியப்பா

43. இழுமென முழங்கும் முரசமொடு குழுமிய

ஒன்னா மள்ளர்த் தந்த முன்னூர்ச்

சிறையில் விலங்கிச் செவ்வேல் ஏந்தி

ஈண்டுநின் றம்ம அணியிற்பெரும் புகழே.

யாண்டுப்பட் டனனே நெடுந்தகை

173

புறத். 1454.

(இ-ள்) இழும் என்னும் ஒலியுடன் முழங்கும் முரசுடன் கூடிவந்த பகை வீரர்களால் தரப்பெற்ற ஊர்ப்புறத்து முற்றுகையைத் தடுத்துச் செவ்விய வேலை மார்பிலே ஏந்தியவாறே பட்டுச் சிறந்தனன் பேராண்மையாளன். அவன் பட்ட இவ்விடத்தே நின்று மாலை சூட்டிக் கொள்வேமெனின் போரில் பெரிய வெற்றிப் புகழாம் என்றவாறு.

இ-து:- வேல்பட்டு மாய்ந்த வீரன் நடுகல் முன்னே போர்மாலை சூடிப் போகின் வெற்றி எளிதில் வாய்க்கும் என்பது சொல்லியது.

(வி-ரை) இழும்: ஒலிக்குறிப்பு “ஏம முரசம் இழுமென முழங்க" என்றார் இரும்பிடர்த் தலையார் (புறம். 3) ஒன்னா மள்ளர்- பகைமறவர். குழுமிய மள்ளரை ஒருதானாக நின்று சிறையில் தடுத்துச் செவ்வேல் ஏந்திப் பட்டனன் எனலால் வீரமேம்பாடு விளக்கமாம். முன்னூர் - ஊர் முன்; இலக்கணப் போலி. சிறையில் விலங்குதல் வெள்ளத்தை அணை தடுத்து நிறுத்தினாற்போல் தடுத்து நிறுத்துதல். இதனை,

“வருவிசைப் புனலைக் கற்சிறை போல

ஒருவன் தாங்கிய பெருமை’

99

என்பார் தொல்காப்பியனார் (தொல். புறத். 7)

66

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றோர்க்(கு) ஆழி எனப்படு வார்”

என்னும் குறளும் (989),

“வேந்துடைத் தானை முனைகெட நெரிதர

ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்