உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம்

12

தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்(கு) ஆழி அனையவன்”

என்னும் புறப்பாட்டும் (330) இவண் கருதத்தக்கனவாம்.

‘ஈண்டு நின்று அணியில்' என்றது வீரன்பட்ட மண்ணின் மாண்பைக் கருதியதாம். வீர வழிபாட்டின் வேர் இஃதென விளங்குமாறு அறிக. அமரிடைப்பட்டு மாய்ந்தவரே அமரர் எனப் பெற்றனர் என்னும் கருத்தும் இவண் நோக்கத்தக்கதாம். து, நடுகல் கண்டு கூறினான் ஒரு வீரன் கூற்று.

19. நூழில்

(43)

பகைவர் படையைக் கொன்று வேலைச் சுழற்றி ஆடுதல்

நூழில் எனப் பெறும்.

66

கழல் வேந்தர் படை விலங்கி

அழல்வேல் திரித் தாட்டமர்ந் தன்று'

“ஆடல் அமர்ந்தான் அமர்வெய்யோன் வீழ்குடர்

சூடல் மலைந்த சுழல்கட்பேய் - மீடன்

மறந்தவேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம் திறந்தவேல் கையில் திரித்து

என இதன் இலக்கணமும் இலக்கியமும் கூறும் புறப் பொருள் வெண்பாமாலை (141). இனி நூழிலாட்டு என்பதோ எனின் தன் மார்பம் திறந்த வேலைப் பறித்து எறிந்தது ஆகலின் அதனின் இது வேறானதாம்.

நேரிசை ஆசிரியப்பா

44. மெய்ம்மலி மனத்தின் நம்மெதிர் நின்றோன், அடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகந் தமரும் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி இளையோன் சீறின், விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறும் கடாஅம் உமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை எறிதல் ஒன்றோ;

மெய்ம்மலி உவகையன் நம்மருங்கு வருதல்