உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

கடியமை கள்ளுண் கைவல் காட்சித்

துடியன் உண்கண் நோக்கிச் சிறிய

175

கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன்

வேல்திரித் திட்டு நகுதலும் நகுமே.

இ-ள்) பூரிப்பு மிக்க உள்ளத்தனாக நம் எதிரே நிற்கும் இவன், கலைத்திறம் செறிந்து விளங்கி ஒளிவிடும் தேர்த்தட்டின் ஒருசார் இருந்து, விரும்பத்தக்க அழகிய கழுத்தினையுை குதிரையைக் கொண்ட முகையவிழ்ந்த கண்ணியினைப் புனைந்த ளையவீரன்; வன் சீறுவனாயின் வானளாவி எழுந்த உயர்ந்த மலையில் பொழியும் மழைபோலத் தண்ணிய நறிய மதநீரைப் பொழிந்த வெள்ளிய தந்தத்தையுடைய பெருமித மிக்க யானையைக் கொல்லுதல் ஒன்றுமட்டுமோ? மீக்கூர்ந்த மகிழ்வுடையவனாக நம்மிடத்தே வருதலொடு, நறுமையும் வெறியும் அமைந்த கள்ளுண்ட கலைத் தேர்ச்சிமிக்க துடிப்பறைக் கிணைவனின் ளி மிக்க ஒளி கண்ணை நோக்கிச் சிறிதே கொலைத்தொழில் இன்னதெனக் கூறுமாப்போல மின்னல் பிதிர்ந்ததொப்பத் தன் வேலைப் பக்கம் சுழற்றி நகுதலும்

செய்வன் என்றவாறு.

இ-து :- இளையோன் சீறின் யானையை எறிவதுடன், துடியனை நோக்கி நின்று தன் வேலைத் திரித்து நகையும் புரிவன் என்பது சொல்லியது.

66

(வி-ரை) ‘மெய்ம்மலி மனம்' - உடலை விரியச் செய்யுமாறு மகிழ்வுகூர்ந்த மனம். ‘சிலை செல மலர்ந்த மார்பு' எனின் வில்லை வளைத்து அம்பு ஏவுங்கால் இருபுறமும் விரிய மார்பு அகலுதல் போல உவகையால் விரிந்தது என்க. மேல், 'மெய்ம்மலி உவகை’ என வருவதற்கும் இதனைக் கொள்க. நின்றோன், இளையோன் என இயைக்க; ளையோன் சீறின், யானை எறிதல் ஒன்றோ; வேல் திரித்திட்டு நகுதலும் நகுமே" எனவும் இயைக்க அடர் வினை - கலைத் தொழிற்செறிவு. பாண்டில் - தேர்த்தட்டு; இவண் தேரைக் குறித்து நின்றது அதன் ஓரத்தே உவகை பெருக நின்றனன் ஆகலின்” “கைஇகந்து' என்றார். அமரும் விரும்பும். அணல் - தாடி; இவண் கழுத்துத் தொங்கலைக் குறித்தது. புயல் - மழை; மழையென ஒழுக்கும் கடாஅம் (மதம்) என யானையின் செருக்குக் கூறியவாறு.

-

கடாஅம் மணமுடையதென்பதை, “கமழ் கடாஅம்" (புறம். 3) “தேன் சிதைந்த வரைபோல, ஞிமிறார்க்கும் கமழ் கடாஅம்"