உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம்

12

(புறம். 22) என வருவனவற்றால் அறிக. களிறு கடாமுற்ற காலையில் அதனை நெருங்குதல் அரிது என்பதைத் ‘துன்னரும் கடாஅம்' என்பதனால் (புறம். 94) கொள்க.

கடி என்னும் உரிச்சொல் மணத்தையும் வெறியையும் ஒருங்குணர்த்தியது. 'இன்கடுங்கள்' என்றும் ‘தேக்கட்டேறல்’ என்றும், 'தேட்கடுப்பன்ன நாட்படு தேறல்' என்றும், 'பாம்பு வெகுண்டன்ன தேறல்' என்றும் சான்றோர் கூறுமாற்றான் தனை உணர்க.

துடியன் உண்கண்ணை நோக்குதல் அவன் பறை முழக்கத் திற்கு இயைய வேல் திரித்து ஆடுதற்கு. இன்றும் ஆடுவார், குழலூதுவானையும் கொட்டடிப்பானையும் நோக்கிக்கொண்டு குறிப்பொருங்குபட ஆடுதல் கண் கூடாகும்.

மின்னுச் சிதர்தல் - மின்னல் வெட்டுதல். வேலின் ஒளியும், திரிக்கும் திறமும் ஒருங்கு விளங்க உவமை கூறினார். கொலை மொழி என்றது பகைவர் குடரைச் சரித்து மாலையெனச் சூடிக் கொண்டு ஆடுதல் கொலையை வெளிப்படுத்திக் கூறுவது ஆயிற்று. 'நகுதலும் நகுமே என்றது ‘வருதலும் வருமே என்பதுபோல நின்றது. பிறரும், 'நீடலும் நீடும்' என்பனபோல உரைத்தார் (மணிமே. 3: 113)

இஃது அதியமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது என்பார் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். புற,.8).

பெருபாக்கன் என்பான் படைத்தலைவருள் ஒருவன் என்பதும், அவன் வீரமாண்பால் அதியமானால் சிறப்பு எய்தினான் என்பதும் ஆயினும் அவனைப் பொருட்டாக எண்ணாமல் சேரமான் போர்க் களத்தில் எதிரிட்டு நின்றான் என்பதும், அவனைக் கண்டு சான்றோர் அரிசில்கிழார் இத் தகடூர் யாத்திரையைப் பாடினார் என்பதும் புலப்படுகின்றன. அதியமான் என்பான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி என்பதும், சேரமான் என்பான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்பதும் பெயராலே தெள்ளிதின் அறியப்பெறும்.

மேற். தொல். பொருள். 63. நச்.

(44)