உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

20. பூக்கோள் நிலை

177

படைஞர் பகைவரொடு போருக்குச் செல்லுதற்கு அரசன் கொடுக்கும் பூவை அணிந்து கொள்ளுதல்.

“காரெதிரிய கடற்றானை

போரெதிரிய பூக்கொண்டன்று”

என்பது இதன் இலக்கணம் (புறப்பொருள் வெண்பாமாலை 70).

“பருதிசெவ் வானம் பரந்துருகி யன்ன குருதியா றாவதுகொல் குன்றூர் – கருதி மறத்திறத்தின் மாறா மறவருங் கொண்டார் புறத்திறுத்த வேந்திரியப் பூ

وو

என்பது இதற்கு எடுத்துக் காட்டு.

நேரிசை ஆசிரியப்பா

45. மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி அப்பியெவ் வாயும் எந்திரப் பறவை இயற்றின நிறீஇக் கல்லும் கவணும் கடுவிசைப் பொறியும் வில்லும் கணையும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசிவரிப் புட்டிலும் என்றிவை பலவும் சென்றுசென் றெறியு முந்தை மகளிரை இயற்றிப் பின்றை எய்பெரும் பகழி வாயிற் றூக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத்

தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர

நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந் தாக்கருந் தானை இரும்பொறை

பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே.

-ள்) வலிமையமைந்த வீரர்கள் மேலே ஏறுதற்கு இ மாகாதவாறு, நெய்யுடன் கடுகுவழியும் அப்பி எவ்விடத்தும் பறவைப் பொறிகளைத் தக்காங்கு நிறுத்தி வைத்துக், கல்லும் கல்லையேவும் கவணையும், கடிய செலவமைந்த பொறிகளும், வில்லும் அம்பும் எனப் பலவகைப்படப் பரப்பிவைத்துப், பந்து