உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம்

12

பாவை பசிய வரிகள் அமைந்த பேழை எனப்பட்டவற்றை, ஆங்காங்குப் போய்ப்போய் வீசி எறியும் கலையான் முதிர்ந்த மகளிர் வடிவப் புனைபொறிகளையும் செய்து, பின்னும், தானே சென்று தைக்கும் அம்புப்பொறியை வாயிற்கண் தூக்கி, மதிப் பிட்டுரைக்கும். எல்லை கடந்ததாயினும் வளையச் சூழ்ந்து இறந்துபட்ட வீரரொடு முடிவான தீக்கண்பாயும் மகளிரின் சிறந்த கற்புநலம் விளங்கக், காண்பார் காண்பார் எல்லாம் நோவுற்றுச் செயலற்றுப் போய் நடுக்கமுறுவர்; எதிரிட்டுத் தாக்குவார் நிற்றற்கரிய படையையுடைய இரும்பொறையின் பூக்கோணிலை புலப்படுத்தும் தண்ணுமைக்குரலைக் கேட்குந் தோறும் கண்ணீர் வடித்தே என்றவாறு.

இ-து:- இரும் பொறையின் பூக்கோணிலைத் தண்ணுமைக் குரல், நோக்குநர் நோக்குநர் நோவுற்றுக் கலுழச் செய்யும் என்பது சொல்லியது.

-

கடுகு.

(வி-ரை) இது பொன்முடியார் பாட்டு என்பார் நச்சினார்க் கினியர். ஏறுதல்- முழுமுதல் அரணத்தைப் பற்றி மேலே ஏறுதல், அவ்வாறு ஏறாமைக்காக மதிலின் உள்ளிருப்பார் செய்து வைத்த தடைகளையும் பொறிகளையும் விரித்து விளக்குவாராய் "நெய்யோடு ஐயவி அப்பி” என்பது முதலாகத் தொடர்ந்தார். நெய் - எண்ணெய் முதலிய பசைப்பொருள்கள். ஐயவி கடுகை அரைத்துச் சேர்த்த ‘விழுது’ ஐயவி என்க. இவை, அரணில் ஏறுவாரை வழுக்கிவிட்டு வீழ்ந்துபடச் செய்யுமாகலின் நெய்யோடு ஐயவி அப்பினர். வழுக்குமரப் போட்டி வைப்பார் விளக்கெண்ணெய் முதலிய பசைப் பொருள்களை அதன்கண் தடவி வைத்தல் கண்கூடு.

‘எந்திரப் பறவை' - பறவை வடிவில் செய்யப்பெற்ற பொறி வகைகள், கல், கவண், கடுவிசைப்பொறிவில், கணை, பகழி என்பன வெல்லாம் தாமே சென்று தாக்கும் வண்ணம் மதிற்கண் அமைக்கப்பெற்ற பொறிவகைகளாம்.

மதிற்கண் அரும்பொறிகள் பல அமைத்தல் உண்மையைச் சங்கச்சான்றோர் பாடல்களாலும், சிலப்பதிகாரம் முதலாய காவியங்களாலும் செவ்விதின் அறியலாம். சான்றாக,

"மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்

கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவணும்

பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்

காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்