உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும்

ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்

6

179

என்று இளங்கோவடிகளார் கூறுவதையும் (சிலப். 15: 206-16) பிறவும் என்றதனால், சதக்கினி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப்பொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி என அடியார்க்கு நல்லார் உரைப்பதும் இவண் அறியத்தக்கனவாம்.

மகளிர் என்பது மகளிர் பொறியை. அப்பொறி பந்து, பாவை, புட்டில் முதலியவற்றைத் தோன்றித் தோன்றி எறிந்து விளையாடும் பொறி என்க. அப்பொறியை அமைத்தல் பகை வீரரை இழிவு படுத்துதற்குச் செய்வது என்பது முருகாற்றுப் படையானும், நச்சினார்க்கினியர் வரைந்த உரையானும் நன்கு விளங்கும்.

"செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்

பொருநர்த் தேய்த்த போர்அரு வாயில்”

என்னும் முருகாற்றுப்படை வரிகளுக்கு உரைகூறி, “பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின என்றவாறு” என நச். விளக்கம் எழுதுவதை அறிக.

இனிப் பந்தும் பாவையும் புட்டிலும் தூக்குதல் அன்றிச் சிலம்பும், தழையும் தூக்குதலும் உண்டு என்பது பதிற்றுப் பத்தான் விளங்கும்.

“செம்பொறிச் சிலம்போ டணித்தழை தூங்கும்

எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்"

- (பதிற். 53)

என்பதையும், “சிலம்பும் தழையும் புரிசைக்கண் தங்கின என்றது, ஈண்டுப் பொருவீர் உளீரேல் நும்காலில் கழலினையும், அரையில் போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச் சிலம்பினையும் தழையினையும் அணிமின் என அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாறென்க” என்னும் பழைய உரையையும் கண்டு தெளிக. தகடூர் யாத்திரையின் இவ்வடிகள்,