உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ்வளம் 12

“பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும்

பலவுஞ்சென் றெறிகிற்கும்

முந்தை மாதரை யியற்றுபு பின்றைமொய்ப் பகழிவா யிலிற்றூக்கி"

எனத் தணிகைப் புராணத்தில் பொன்னேபோற் போற்றப் பெற்றிருத்தல் எண்ணி மகிழத் தக்கதாம்.

சுட்டல்- மதித்தல். இவண் இனைத்தென மதிப்பிட்டுக் கூறுதல். சூழநின்று அழலிடைப் பாய்வார் ஆகலின் ‘வட்டத் தீப்பாய் மகளிர்' என்றார். இவர் காதலன் இறப்பக் கனைஎரி மூழ்குவார் என்க. திகழ்நலம் பேர்தல் விளக்கமிக்க எழிலுரு அழிந்து படுதல்.

-

மகளிர் தீப்பாய்தலைக் காணுதல் கண்ணராவிக் காட்சி யாகலின், "நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும் என்றார். கைவிதிர்த்தல் - நடுங்குதல்.

தாக்க அரும் தானை - பகைவரால் தாக்குதற்கு அரிதான படை. எண்ணவே நடுக்கங்கொள்ளுவார் எதிரிட்டுத் தாக்க வொண்ணுமோ என உட்கொண்டாராய்த் ‘தாக்கருந் தானை' என்றார். இரும்பொறை என்பது வேந்தன் பெயர்; அவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை என்க.

தண்ணுமை ஒரு தோற்பறை; அத் தண்ணுமை முழக்கும் கரணியம் வெளிப்படுப்பாராய்ப் 'பூக்கோட்டண்ணுமை' என்றார். இது புறத் துறையுள் பூக்கோணிலை எனப்படும். பூக்கோள் தண்ணுமை என்பது ‘பூக்கோள் ஏய தண்ணுமை' என்பதாம். பூக்கோள் தண்ணுமை முழங்குதலை,

‘பூக்கோள் இன்றென் றறையும் மடிவாய்த் தண்ணுமை

என்றும் (புறம். 289),

“பூக்கோள் என ஏஎய்க் கயம்புக் கனனே

என்றும் (புறம். 241),

66

இருபெரு வேந்தர் மாறுகோள் வியன்களத் தொருபடை கொண்டு வருபடை பெயர்க்கும் செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறலெனப் பூக்கோள் ஏய தண்ணுமை

99

என்றும் (அகம். 175) வருவனவற்றால் அறிக.