உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

181

இரும்பொறையின் அரணத்தை விரித்து, அவனை எதிர்த்தோர் மகளிர் தீப்பாய்தலைப் பூக்கோட் டண்ணுமை கேட்டொறும் கலுழ்ந்து நொந்துகை விதிர்க்கும்” என்றார் ஆகலின் அவன் வீறு மேம்பாட்டை விளம்பினார் என்க.

'கண்சிவக்க வாள்சிவந்த' தெனக் கூறுமாறு போலத் தண்ணுமை கேட்ட அளவிலே தீப்பாய் மகளிரை நோக்கிச் சான்றோர் உள்ளம் கனன்று கலுழ்ந்தனர் என்றார். பகைவர் அமைதலும் இரும்பொறை அருள்தலும் அமையின் உய்வுண்டாம் என்பது புலவர் பேரருள் விளக்கமாம்.

மேற். தொல். புறத். 12. நச். இதனைத் ‘தொல் எயிற்கு இவர்தல்' என்னும் புறத்துறைக்கு மேற்கோள் காட்டியுள்ளார்.

21. புறத்தோன் அணங்கிய பக்கம்

(45)

-

மாறுபட்டு வந்த புறத்தோனை அகத்தோன் தன் ஆற்றலால் வருந்தச் செய்தல் புறத்தோன் அணங்கிய பக்கம். அணங்குதல் வருத்துதல். புறத்தோன் வருந்தினன் ஆகலின் வருத்தியோன் அகத்தோன் என்க. அவ்வாறு வருத்தியபோது, ஆற்றல் மீக்கூர்ந்து அடிக்கும் கோலைத் தாங்கி ஆர்த்தெழும் ஆடரவம் போலப் புறத்தோன் எழுந்து அடர்ப்பன் என்பது இத் துறையான் விளங்கும் (தொல். புறத். 12)

புறத்தோன். அடர்த்தெழுதலை ‘முற்றுமுதிர்வு' என்பார் ஐயனாரிதனார். "அகத்தோன் காலை அதிர்முர சியம்பப் புறத்தோன் வெஞ்சினப் பொலிவுரைத் தன்று” என்பது அவர் வாக்கு (புறப். வெண். 117)

46.

நேரிசை ஆசிரியப்பா

கலையெனப் பாய்ந்த மாவும் மலையென மயங்கமர் உழந்த யானையும் இயம்படச் சிலையலைத் துய்ந்த வயவரும் என்றிவை பலபுறங் கண்டோர் முன்னாள் இனியே அமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுரைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கில் தூற்றயற் கிடப்பக்