உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் 12

களையாக் கழற்கால் கருங்கண் ஆடவர் உருகெழு வெகுளியர் செறுத்தனர் ஆர்ப்ப மிளைபோய் இன்று நாளை நாமே உருமிசை கொண்ட மயிர்க்கண்

திருமுர(சு) இரங்க ஊர்கொள் குவமே.

இ.ள்) முசுக்கலையெனப் பாய்ந்த குதிரையும், மலையென மயங்கச் செய்யும் தோற்றமுடையதாய்ப் போரில் அழுந்திய யானையும், பல்வேறு இசைக்கருவிகள் முழங்க வில்லால் பகைவரை அழித்துச் சிறப்புடன் மீண்ட வீரரும் எனப்பட்ட இவை பலவற்றை மேனாளில் புறங்கண்டோராய நின் வீரர்; போரில் பகைவர் புறமிட்டோடுதலையே கண்ட என்றும் ஆறாத புண்களையுடைய வேந்தனே, இனி இப் போரில், பரிய னி யானையால் உதைக்கப் பெற்றுக் கணைகள் தைத்து ஊன்றி யிருக்கும் வீரரின் வளமான தலைகள் வெட்டுவாய் அறுக்கப் பட்ட நுங்குக்காயைப்போல் புதற்புறங்களில் கிடக்குமாறு, அவிழ்க்கப்பெறாத கழலையுடைய காலையும், கரிய கண்ணையும் உடைய மறவர்கள், பொங்கி எழும் வெகுளியினராய், மனக் கறுவினராய் ஆரவாரம் கொள்ள இன்று காவற்காட்டைக் கடந்து போக நாளைப்பொழுதில் நாம் இடியொலியைத் தனதாகக் கொண்ட மயிர் சீவாதொழிந்த வீரத் திருவுறையும் முரசு முழங்க ஊரைப்பற்றிக் கொள்வோம்.

க்

இ-து :- “வேந்தே, முன்னாள் பலபுறங்கண்டோர்; இன்று மிளைகொள்வர், நாளை நாம் ஊர் கொள்குவம்” என்பது சொல்லியது.

(வி-ரை) இது து சேரமான் பொன்முடியாரையும், அரிசில்கிழாரையும் நோக்கித் தன்படை பட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது என்பார் நச்சினார்க்கினியர் (தொல். புறத். 12).

இதனால் சேரமான் மதிற்புறத்து இருந்த வேந்தன் என்பதும், அவன் படைகளை மதிற்குள் இருந்தோன் படை அலறத் தாக்கிற்று என்பதும், தன் படைகள் படும்பாட்டையும், உள்ளிருப்போன் படை படுத்தும்பாட்டையும் எண்ணிய சேரமான் அதனை அரிசில்கிழாரிடத்தும் பொன்முடியாரிடத்தும் கூறினான் என்பதும், அதனைக் கேட்ட அவர்கள் இன்று காவற்காட்டைக் கடந்து உள்ளே போவதும், நாளை நாம் ஊரைப் பற்றிக்கொள்வதுமே உறுதி என்று கூறினார் என்பதும்