உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

183

புலப்படும். கேட்டோற்கு- கேட்ட சேரமானுக்கு. அவர் அரிசில்கிழாரும் பொன்முடியாரும்.

இனிப் னிப் பகைவர் மதிற்பொறிகளும், அவர் தம் வீர மாண்பும், எதிரிடுவாரை நாணுறுத்துமாறும் (45) பொன் முடியார் பாடிய பாட்டு ஒன்று உளதாகலின், இஃது அரிசில் கிழார் பாடிய பாட்டு எனினும் ஏற்புடையதேயாம்.

கலை எனப் பாய்ந்த மா' என்றார் குதிரையை. கலை இவண் மான் கலை அன்றாம்; முசுக்கலையாம். பாய்தலைச் சுட்டினார் ஆகலின் மான்கலை விலக்கப் பெற்றதாம். இயம் சைக் கருவிகள். அவை பலவாகச் செறிந்தவற்றைப் ‘பல்லியம்’ என்றது அறிக.

இவர் அடிப்பட்ட வீரர் என்பாராய்ப் “பலபுறங் கண்டோர்" என்றார், பலபுறங் கண்டோர் அமர் செய்தலை ஆடல் எனக் கருதிக் களிகூர்வராகலின்.

கண்ட

வன்

புறங்கண்டான் என்பது பகைவர் பல்காலும் அஞ்சி ஓடக் என்பதால் அவர் வலியிலாப் பகைவரோ என எண்ணுவார் உளராயின் அவரை மறுத்தற்குப் ‘பசும்புண்’ என்னும் அடைமொழி தந்தார். அவர் வன்மையாகத் தாக்கிப் புண்பாடு செய்யவல்ல பொருநரே என்பது குறிப்பு.

அம்புகள் தைத்து மூழ்கிக்கிடந்த வீரர் தலைகளை மதக் களிறு எற்றித் தள்ளுகிறது. அத் தலை மூக்கறுபட்டுக் கட் குழியும், வாய்ப்புழையும் தோன்றக்கிடத்தலை மூக்கறு நுங்குக்கு ஒப்பிட்ட இயற்கைப் புனைவு, அருமைப்பாடு உடையதாம். தலை கருமைக்கும், புழை எண்ணிக்கைக்கும், மூக்கறு பாட்டுக்கும் பொருந்திய செப்பம் உடையது.

நுங்கிற் காயின் மூக்கு அறுவாய் அல்லது வெட்டுவாய் என்க. பாளையொடு கூடிய பக்கம் அது. மூக்கு முன்புறமாதலை,

"புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

மூக்கிற் கரியார் உடைத்து

என்னும் குறளால் ஆய்ந்து கொள்க.

(குறள். 277)

இடையீடறப் பொருகளம் சேறலை விளக்குதற்குக் ‘களை யாக் கழற்கால்' என்றார். மிளையாவது காவற்காடு. காவற் காட்டைக் கடந்து ஆடவர் இன்று போவது உறுதி என்றார். போர்வீரர் அல்லராகிய தம்மை உள்ளடக்கி, இன்றி நாமே

-

-