உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

12 இளங்குமரனார் தமிழ்வளம்

நடுக்கமுறுமாறு கருநிறக் காக்கையும், வெளிறிய நிறக் கூகையும் அரசர் அமரர் என்னும் இருவகைப்பட்ட உயர் திணையினர்க்கும் எடுக்கப்பெற்ற கொடிகளொடும், கண்டோர் அஞ்சத்தக்க தோற்றத்தோடு வெளிப்பட்ட பல பேய்க்

கூட்டங்கள் குருதி யொழுகும் மண்டைகளைச் சுமந்துகொண்டு ஆடவும், பறை போன்று விழித்த கண்ணினளும், பிறைநிலாப் போன்ற பெரிய பல்லினளும், குடைபோன்ற தடமார்பினளும், இடையை இல்லையாகச் செய்த பெரியவயிற்றினளும், இடி போன்ற பேரொலியினளும், தடித்தவாயின் கடையின்கண் தசை தொங்க அமைந்தவளும், கடல்போன்ற கறுத்த பெரிய உடலினளும் காண்பவர்க்குக் கடுங் காட்சி வழங்கும் மணங் கமழும் கூந்தலையுடையவளும் வில்லன்ன புருவத்தினளும், அகன்று உயர்ந்த பேரல்குலினளும், மழை முகிலும் மஞ்சி மூட்டமும் காற்றும் செல்வதுபோன்ற விரைந்த செலவுடையவளும் ஆகிய ஒரு பெண்மகள் தன் தலையை விரித்துப்போட்டு வலிய கையைத் தொங்கவிட்டு, தீமையைக் களைந்து எதிரிட்டுரைப்பாரும் மாறுபாடற ஏற்றுக் கொள்ளத்தக்க மதிவலியாளனுக்கு இத்தகைய 'சீரிய வாணாள் இத்துணையே யாம்' என்று தன் பூப்போன்ற விரலை நீட்டிக் காட்டிப் புழுதி எழும்பத் தன் கைகளால் நிலத்தில் அறைந்து ஊரை இடமாகச் சுற்றி நன்காடு புகுவதைக் கண்டேன்! என்னும் கவலை கூர்ந்த நெஞ்சத்துடன் நீங்காத் துன்பவெள்ளத்தில் தத்தளித்தாள் அன்று. அஃதுறுதியாகி விடும்போலும் அதியமான் தாய்க்கே.

இ-து “கனவுபோலவும் நனவுபோலவும் ஒரு பெண்டாட்டி 'இம் முறைநாள் இவ்வளவு' என்று கூறி அன்று ஊரை இடம் போகக் கண்டாள்; அஃதுறுதியாகி விடும்போலும் அதியமான் தாய்க்கு” என்பது சொல்லியது.

(வி-ரை) இக்காட்சி கண்ணுறக்கத்தில் கண்டது ஆகலின் கனவெனுமாறும், ஆனால் கண்ணேராகத் தெளியக் காண்பது போல் இருந்ததாகலின் நனவெனுமாறும் இருந்தமையின் 'கனவே போலவும் நனவே போலவும்' என்றார். அதியமான் தாய்கண்ட காட்சியை அறிந்தார் ஒருவர் அதன் முடிவு யாதாம் என எண்ணி நொந்து 'உண்மையாம் போலும்' என உறுதி கொண்டு உரைத்தார் கூற்றாகலின் ‘அது மன்ற அவ் வதியன் தாய்க்கே' என்றார்.

'என் உள்ளகம் நடுக்குற' என்றது அதியமான் அன்னையார் தாம் கண்ட காட்சியை உட்படுத்திக் கூறியது. உயர்திணை