உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

187

இருவகை என்பதை ஆடவர் பெண்டிர் எனக் கோடலாமோ எனின் அன்று; இருவகை உயர்திணைக் கொடிகள் எடுத்தல் என்னும் வழக்கு இன்மையான். மற்று வேந்தர்க்கெனவும்,, தெய்வங்களுக்கெனவும் இருவகைக் கொடிகள் எடுக்கும் வழக்குண்மையால் அதனைக் குறித்தாம் என்க. இனி வேந்தர் எடுத்த கொடியும் வீரர் எடுத்த கொடியும் எனினும் ஆம்.

கூளிக் கணங்கள்- பேய்க்கூட் ங்கள். அவை குருதி மண்டை சுமந்தாடின என்க. குருதிமண்டை - குருதி ஒழுகும் மண்டை. அன்றிக் குருதி இருக்கும் மண்டைப் பாத்திரம் எனினும் ஆம். கருமணிக்கும் வெண்படலத்திற்கும், அகற்சிக்கும் பறை கண்ணொடும் உவமையாம், மூடாப்பறையை விழித்த கண்ணுக்குத் தகக் கொள்க.

குடையன்ன என்பதற்குக் 'குவடும், கூடும்' பாடங்கள் உண்மையான் அவற்றுக்கு மலையும், மறியடைக்கு குடிலும் கொள்க. இடைகரத்தல் - இடை இல்லையெனச் செய்தல். அது சுருக்கம் இல்லாமல் பொதியெனப் பருத்துத் தோன்றுதல். மோடு-வயிறு. 'முகடு' என்னும் வழக்குக் காண்க.

-

-

காண்பு - காண்டற்கு. இன்னா இனிமை தராத காட்சி. ன்னாச்சொல் என்பது போன்ற பொருளது இன்னாக்காட்சி. செலவு - செல்லுதல். மழை நீர்கொண்ட மேகம். மஞ்சு- வறந்த மேகம். பெண்டாட்டி- பெண். பெண்டன்மையை ஆள்பவள். இன்றும் இச்சொல் இப் பொருளில் நாட்டுப்புற வழக்கில் உள்ளதாம். "கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி என்பது திரிகடுகம் (96)

ஒன்றை உறுதிப்படக் கூறுவார் நிலந்தொட்டுக் கூறுதலும் தலையில் அடித்தும் நூல்தொட்டும் கூறுதலும் வழக்கமாம். இதனை நீறு பொங்கத் தன் கைகளால் நிலனடித்துக் கூறியதாக உரைத்தார். பரிபாடலில் திருமுருகன் உறையும் திருப்பரங்குன்ற மலையின் அடிதொட்டுக் கூறிய செய்தி யுண்மை காண்க.

ம்

வலம் போதல் நலந்தரும் என்னும் துணிவால், இடம் போதல் கேடுதரும் என்பதை உணர்ந்து, 'இடஞ்செய்து காடு புகுதல் கண்டேன்' என்றாள். கனவேபோலவும் என்பது தொடங்கிக் காடு புகுதல் கண்டேன் என்பதுகாறும் அதியன் தாய் கூற்றாகப் பாவலர் உரைத்ததாம். இறுதி ஈரடிகளும் பாவலர் தாம் இரங்கிக் கூறியதாம்.