உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம்

12

“அன்றது மன்றவ் வதிகமான் தாய்க்கு" என்பதே பாடம் ஆயின் ஆசிரியவீறு ஏகாரத்தான் முடிதலே பாட்டிலும் தொகையிலும் கண்டதாகலின் 'தாய்க்கே' எனப் பெற்றது; பாடல் பொருள் முடிந்து நின்றதறிக.

47

இப் பாடல் தக்கயாகப்பரணி உரையாசிரியரால் 397 ஆம் தாழிசை உரையில் மேற்கோளாக ஆளப்பெற்றுள்ளது. து தகடூர் யாத்திரை' என்பதைக் காட்டியுள்ளார். மேலும் தகடூர் யாத்திரையில் தர்க்கவாதம் உண்டு என்னும் செய்தியையும் அவர் கூறுகிறார் (தாழிசை 131). தகடூர் யாத்திரை முழுமையுறக் கிட்டாது ஒழியினும் தருக்கவாதம் உண்மைக்குக் கிடைத்துள்ள பாடல்களிலேயே சான்று உண்டென்பதை இப் பாடலினும் ஆராய்ச்சி முன்னுரையினும் கண்டு கொள்க.

தகடூர் யாத்திரைப் பாடல்கள் எனத் தெளிவாகத் தெரிந்த நாற்பத்தெட்டுப் பாடல்களுக்கும்

புலவர் இராமு இளங்குமரன் இயற்றிய

உரைவிளக்கம் முற்றும்.