உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி”

என்பது திருக்குறள்.

53

திருக். 118.

அரசன் ஆள்வோனே எனினும் அவனே படைத்தலைவ னாகவும், அறங்கூறு அவையத் தலைவனாகவும், புலவர் தலைவனாகவும் இருந்த காலம் உண்டு. அதனால், அவன் 'சான்றோர்' என விளங்கினான். அவன் சமனிலை பேணினான் என்பது இதனால் கூறாமலே வெளிப்படும்.

ஒருபால் கோடுதற்கு அடிப்படை என்ன? விருப்பு வெறுப்பு என்பவையே ஒருபால் கோடிச் செல்லுதற்கு அடிப்படை. அவ்விரண்டு தன்மைகளும் ஒன்றற்கு ஒன்று எதிரிடையானவை. ஆகலின் இத் தன்மைகளில் எந்த ஒன்றுக்கு ஆட்பட்டவரும் நடுவுநிலை பேணார் என்பது தெளிவு. இதனால் அன்றோ,

66

காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்

ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமும் தோன்றாக் கெடும்"

என்று அறநெறிச் சாரமும் (42)

66

“வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம் தீரக் காய்ந்துழி நல்லவும் தீயவாம்”

என்று சிந்தாமணியும் (888) கூறின.

என

விருப்பு வெறுப்பற்ற தன்மையே இறைமை. அது துன்ப நீக்க நிலைக்களம். “வேண்டுதல் வேண்டாமை ாமை இலான் இறைமைத் தன்மை இன்னதென விளக்கினார் திருவள்ளுவர் அதனை இத் தகடூர் யாத்திரை, “ஆர்வமும் செற்றமும் நீக்கி” என்று கூறிற்று.

நடுவு நிலைமையாவது சமனிலை என்றாம். சமனிலை யாவது “வாளால் போழினும் தாளில் வீழினும்” ஒப்ப நிற்கும் ஒருநிலை. அந் நிலையினர், தமக்கோர் குறைவு உண் யினும் தாம் கொண்ட கொள்கைக் கொரு குறையுண்டாகப் பொறார். இதற்குப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனினும் சான்றாவார் ஒருவர் உளரோ?