உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

-

இளங்குமரனார் தமிழ்வளம் – 12

இ-து: ஒருவேந்தன் படை எண்ணிக்கையால் பெருக்கம் எய்துவதும், அதன் செயல் திறத்தால் பெருக்கம் எய்துவதும் அவன் செங்கோல் மாண்பைப் பொறுத்ததேயாம் என்பது கூறியது.

(வி

ரை) ‘மற மன்னர் ஒன்னார்க்கு உயர்த்த படை, சிறப்பிற் சிறுகுவ துண்டோ?” என இயைக்க.

வேந்தன் செங்கோலன் அல்லன் ஆயின் ஆயின் உட்பகை உண்டாம் என்பதும், உட்பகை எட்பிளவு அன்ன சிறுமைத் தாயினும் கெடுத்து விடுதல் ஒருதலை என்பதும், வெளிப்பகை கோடியினும் உட்பகை ஒன்றன் கேடே பெரிதாம் என்பதும், அறக்கோல் நடாத்தும் வேந்தனுக்குத் தம் ஆருயிர் தருதலை பிறவிப் பயன் எனப் படைவீரரும் குடிமக்களும் முந்து நிற்பர் என்பதும் வரலாறு காட்டும் உண்மைகள் ஆகலின் இவ்வாறு கூறினார்.

“எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை யுள்ளதாம் கேடு"

திருக். 889

66

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு”

- திருக். 882.

“பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துத் தெவ்வோர்

எழுபது கோடி யுறும்"

- திருக். 639

“புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பின் சாக்கா(டு)

இரந்துகோள் தக்க துடைத்து

- திருக். 780.

அறக்கோல் என்பது செங்கோல்; செம்மை என்பது நேர்மை, நேர் என்னும் பொருட்டது. செங்குணக்கு, செம்பாதி என்பன நேர்கிழக்கையும் சரி பாதியையும் குறிப்பன.

கொடுங்கோல் என்பது வளைந்தகோல் என்னும் பொருட்டது. வளைந்த கோலினராய் ஆமேய்த்துத் திரிவாரைக் 'கொடுங்கோல் கையர்' என்று கூறும் முல்லைப் பாட்டு. நேர் அல்லது நேர்மை தவறுவது வளைவு ஆயிற்று. கோல் என்பது ஆகுபெயராய் ஆட்சியைக் குறித்து நின்றது.

ஒருபால் கோடாது நேராக நிற்கும் சமன்கோலைச் செங்கோலுக்கு ஒப்பிட்டுக் காட்டுவர்.