உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

51

என்று கூறினார். இவற்றையெல்லாம் உள்ளடக்கித், “தேற்றப் பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை இரப்பாரை எள்ளா மகன்” என்றார் என்க.

யாப்பமைதி:

நான்கு அடியின் மிக்குப் பன்னீரடிகாறும் வருவன பஃறொடை வெண்பா ஆகும். இதனுள் முதன் மூன்று அடியும் ஓரெதுகையாகவும், பின் இரண்டு அடியும் ஓரெதுகையாகவும் வந்துள்ளமையால் பலவிகற்பப் பஃறொடை வெண்பா ஆகும். ‘ஒன்றல்லது பல' என்பது தமிழ்வழக்கு ஆகலின் இவ்வெண்பா ‘மலர்’ என்னும் வாய்ப்பாட்டான் முடிந்தது.

66

3. செங்கோன்மை - 1

(உ)

அரசனால் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற் கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோல் எனப் பட்டது”- பரிமேலழகர்.

செவ்விதாகிய முறைசெய்தலுடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலால் கோல் என்றார். அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று”. மணக்குடவர்.

66

-

"ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை”

பலவிகற்பப் பஃறொடை வெண்பா

3. இறப்பப் பெருகி இசைபடுவ தல்லால் சிறப்பிற் சிறுகுவ துண்டோ? அறக்கோலால் ஆர்வமும் செற்றமும் நீக்கிமற் றியார்கண்ணும் இன்னாத வேண்டா இகல்வேல் மறமன்னர் ஒன்னார்க் குயர்த்த படை.

-

- குறள். 541

(இ-ள்) செங்கோன் முறையால், 'இவர் வேண்டியவர்’ என்னும் பற்றும், 'இவர் வேண்டாதவர்’ என்னும் வெறுப்பும் நீக்கி, எவரிடத்தும் தீமை செய்தலை மேற்கொள்ளாத வலிய வேற்படை கொண்ட வீரவேந்தர் பகைவர்மேற் பொர எடுத்த படை எண்ணிக்கையால் பெருகியும் செய்யும் பேராண்மைச் செயலாலும் பெருகியும் புகழப் பெறுவதை அல்லாமல் புகழ்க் குறைபடுவது இல்லையாம் என்றவாறு.